YEsu raaja vanthirukkiraar | இயேசு ராஜா வந்திருக்கிறார்

இயேசு ராஜா வந்திருக்கிறார்
yEsu raaja vanthirukkiraar
எல்லோரும் கொண்டாடுவோம்
ellOrum koNdaaduvOm
கைதட்டி நாம் பாடுவோம்
kai thatti naam paaduvOm

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
koNdaaduvOm koNdaaduvOm
கவலைகள் மறந்து நாம் பாடுவோம் -2
kavalaihaL maranthu naam paaduvOm

கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
kooppidu nee pathil koduppaar
குறைகளெல்லாம்  நிறைவாக்குவார் -2
kuraihaLellaam niraivaakkuvaar
  உண்மையாக தேடுவோரின்
  uNmaiyaaha thEduvOrin
  உள்ளத்தில் வந்திடுவார் -2 – கொண்டாடுவோம்
  uLLaththil vanthiduvaar 

மனதுருக்கம் உடையவரே
manathurukkam udaiyavaraE
மன்னிப்பதில் வள்ளலவர் -2
mannippathil vaLLalavar
  உன் நினைவாய் இருக்கின்றார்
  un ninaivaai irukkintaar
  ஓடிவா என் மகனே (ளே) -2 – கொண்டாடுவோம்
  Odi vaa en mahanaE

கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
kaNNeerellaam thudaiththiduvaar
கரம் பிடித்து நடத்திடுவார் -2
karam pidiththu nadaththiduvaar
  எண்ணமெல்லாம்  ஏக்கமெல்லாம்
  eNNamellaam yEkkamellaam
  இன்றே நிறைவேற்றுவார் -என்-2 – கொண்டாடுவோம்
  intraE niraivEtruvaar

நோய்களெல்லாம் நீக்கிடுவார்
nOihaLellaam neekkiduvaar
நொடிப்பொழுதே சுகம் தருவார் -2
nodippozhuthaE suham tharuvaar
  பேய்களேல்லாம் நடுநடுங்கும்
  pEihaLellaam nadunadungum
  பெரியவர் திரு முன்னே – நம்ம-2 – கொண்டாடுவோம்
  periyavar thiru munnaE -namma

பாவமெல்லாம் போக்கிடுவார்
paavamellaam pOkkiduvaar
பயங்களெல்லாம்  நீக்கிடுவார் -2
bayangaLellaam neekkiduvaar
  ஆவியினால் நிரப்பிடுவார்
  aaviyinaal nirappiduvaar
  அதிசயம் செய்திடுவார் -2 – கொண்டாடுவோம்
  athisayam seiythiduvaar

கசையடிகள் உனக்காக
kasaiyadigaL unakkaaha
காயமெல்லாம் உனக்காக -2
kaayangaL unakkaaha
  திரு இரத்தம் உனக்காக
  thiru raththam unakkaaha
  திருந்திடு என் மகனே -2 – கொண்டாடுவோம்
  thirunthidu en mahanaE