Ummaiyallaamal enakku yaaruNdu | உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
ummaiyallaamal enakku yaaruNdu
உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? -2
ummaith thavira viruppam yethuvuNdu

ஆசையெல்லாம் நீர்தானையா
aasaiyellaam neerthaanaiyah
தேவையெல்லாம் நீர்தானையா -2
thEvaiyellaam neerthaanaiyah
  இரட்சகரே… இயேசுநாதா…
  ratchakaraE.. yEsunaathaa..
  தேவையெல்லாம் நீர்தானே -2 -உம்மையல்லாமல்
  thEvaiyellaam neerthaanaE

இதயக் கன்மலை நீர்தானய்யா
idhaya kanmalai neerthaanaiyah
உரிய பங்கும் நீர்தானய்யா -2
uriya pangum neerthaanaiyah
  எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
  eppOthum ummOdu irukkintraEn
  வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்  -2— ஆசை
  valakkaram pidiththu thaanguhireer

உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
ummOdu vaazhvathaE en paakkiyam
நீரே எனது உயிர்துடிப்பு -2
neeraE enathu uyirthudippu
  உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
  umathu viruppam pOl nadaththuhireer
  முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் -2 — ஆசை
  mudivilaE mahimaiyil yEtru koLveer

உலகில் வாழும் நாட்களெல்லாம்
ulahil vaazhum naatkaLellaam
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் -2
umathu seyalhaL solli mahizhvaEn
  உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
  ummaith thaan adaikkalamaai koNduLLaEn
  உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் — ஆசை
  ummaiyaE nambi vaazhnthiruppaEn