UngaL thukkam santhOshamaai maarum | உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
ungaL thukkam santhOshamaai maarum
உங்கள் கவலைகள் கண்ணீர்
ungaL kavalaihaL kaNNeer
எல்லாம் மறைந்து விடும் -2
ellaam marainthu vidum

கலங்காதே மகனே.. கலங்காதே மகளே..
kalangaathaE mahanaE.. kalangaathaE mahaLaE..
 என் இயேசு கைவிட மாட்டார் -2
 en yEsu kaivida maattaar

கடந்ததை நினைத்து கலங்காதே
kadanthathai ninaiththu kalangaathaE
நடந்ததை மறந்துவிடு -2
nadanthathai maranthu vidu
  கர்த்தர் புதியன செய்திடுவார்
  karththar puthiyana seiythiduvaar
இன்றே நீ காண்பாய் -2
intraE nee kaaNbaai..

கலங்கிடவே வேண்டாம் -2
kalangidavaE vENdaam

உன் இயேசு கைவிட மாட்டார் -2-உங்கள் துக்கம் 
un yEsu kaivida maattaar

நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
norunguNda idhayam thEtruhiraar
உடைந்த உள்ளம் தாங்குகிறார் -2
udaintha uLLam thaanguhiraar
  காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
  kaayangaL anaiththaiyum kattuhiraar
கண்ணீர் துடைகின்றார் – உன் -கலங்கிடவே 
kaNNeer thudaikkintaar -un

திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
thiraaNikku mElaaha sOthikkappada
ஒருநாளும் விட மாட்டார் -2
orunaaLum vida maattaar
  தாங்கிடும் பெலன் தருவார்
  thaangidum belan tharuvaar
தப்பி செல்ல வழி செய்வார் – நீ -கலங்கிடவே 
thappi sella vazhi seiyvaar -nee

நல்லதோர் போராட்டம் போராடுவோம்
nallathOr pOraattam pOraaduvOm
விசுவாசம் காத்துக் கொள்வோம் -2
visuvaasam kaaththuk koLvOm
  நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
  neethiyin kreedam namakku uNdu
நேசர் வருகையில் தந்திடுவார் – நம் -கலங்கிடவே 
nEsar varuhaiyil thanthiduvaar -nam