Unnai athisayam kaaNa seiyvaEn | உன்னை அதிசயம் காணச் செய்வேன்

உன்னை அதிசயம் காணச் செய்வேன்
unnai athisayam kaaNa seiyvaEn
நீ அற்புதம் கண்டிடுவாய் -2
nee arputham kaNdiduvaai
  என்று  வாக்களித்தார் தேவன்
  entru vaakkaLiththaar dEvan
  இன்று நிறைவேற்ற வந்து விட்டார் -2— உன்னை
  intru niraivEtra vanthu vittaar 

வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
vazhi thirakkum athisayam nadanthidumaE
செங்கடலும் திறந்தே வழிவிடுமே -2
sengadalum thiranthaE vazhi vidumaE
  தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
  thadaihaLellaam thaharnthaE pOhumaE
  இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே-2 — உன்னை
  idainjalellaam intraE marainthidumaE 

குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
kuraihaLellaam niraivaahum athisayamaE
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே -2
iraimahanaam yEsuvaal nadanthidumaE
  வாதையெல்லாம் மறைந்தே போகுமே
  vaathaiyellaam marainthaE pOhumaE
  பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே -2— உன்னை
  paathaiyellaam neiyaai pozhinthidumaE

வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
vazhinadaththum athisayam nadanthidumaE
காரிருளில் பேரொளி வீசிடுமே -2
kaariruLil pEroLi veesidumaE
  வனாந்திரமே வழியாய் வந்தாலும்
  vanaanthiramaE vazhiyaai vanthaalum
  வல்லவரின் கரமே நடத்திடுமே -2— உன்னை
  vallavarin karamaE nadaththidumaE