Vazhi nadaththum valla dEvan | வழி நடத்தும் வல்ல தேவன்

வழி நடத்தும் வல்ல தேவன்
vazhi nadaththum valla dEvan
வாழ்வில் நாயகனே 
vaazhvil naayahanaE 
  வாழ்வில் நாயகனே
  vaazhvil naayahanaE 
  நம் தாழ்வில் நாயகனே -வழி நடத்தும் 
  nam thaazhvil naayahanaE

பரதேசப் பிரயாணிகளே நாம்
paradEsap pirayaaNikaLaE naam
வாழும் பாரினிலே  -2
vaazhum paarinilaE 
  பரமானந்தத்தோடே செல்வோம் 
  paramaananthaththOdaE selvOm 
  பரமன் நாட்டிற்கே
  paraman naattirkkaE
இயேசு பரன் தம் வீட்டினிற்கே-வழி நடத்தும் 
yEsu paran tham veettinirkaE

போகும் வழியைக் காட்டி நல்ல
pOhum vazhiyai kaatti nalla
போதனை செய்வார்   -2
pOthanai seiyvaar
  ஏகும் சுத்தர் மீது கண்கள் 
  yEhum suththar meethu kaNkaL 
  இருத்தி நடத்துவார்
  iruththi nadaththuvaar
இயேசு திருத்தி நடத்துவார்  -வழி நடத்தும் 
yEsu thiruththi nadaththuvaar

அந்தகார சக்திகள் எம்மை
anthakaara sakthihaL emmai
அணுகிடாமலே -2
aNuhidaamalaE
  சொந்தமான தம் ஜனத்தை 
  sonthamaana tham janaththai
  சூழ்ந்து காப்பாரே
  soozhnthu kaappaaraE
இயேசு துணையாய் நிற்பாரே-வழி நடத்தும் 
yEsu thuNaiyaai nirpaaraE

வாதை நோய்கள் வன்துன்பங்கள்
vaathai nOihaL van thunbangaL
வருத்திய போதும் -2
varuththiya pOthum
  பாதையில் நாம் சோர்ந்திடாமல் 
  paathaiyil naam sOrnthidaamal
  பலப்படுத்திடுவார்
  palappaduththiduvaar
இயேசு திடப்படுத்திடுவார்-வழி நடத்தும் 

காடானாலும் மேடானாலும் 
kaadaanaalum medaanaalum 
கடந்து சென்றிடுவோம் -2
kadanthu sentriduvOm 
  பாடானாலும் பாடிச் செல்வோம்
  paadaanaalum paadi selvOm

  பரவசமுடனே
  paravasamudanaE
இயேசு பரன் தான் நம்முடனே-வழி நடத்தும் 

அன்றன்றுள்ள தேவை தந்து
antantruLLa thaEvai thanthu
ஆதரிப்பாரே -2
aatharippaaraE
  என்றென்றும் துதிகனமும் 
   entrentrum thuthi ganamum
  மகிமையவர்க்கே
  mahimaiyavarkkaE
இயேசு மகிபனாமவர்க்கே-வழி நடத்தும் 
yEsu mahibanaamavarkkaE