Kalvaariyin karuNaiyithaE | கல்வாரியின் கருணையிதே

கல்வாரியின் கருணையிதே
kalvaariyin karuNaiyithaE
காயங்களில் காணுதே
kaayangaLil kaaNuthaE
  கர்த்தர் இயேசு பார் உனக்காய்
  karththar yEsu paar unakkaai
  கஷ்டங்கள் சகித்தாரே -2
  kashtangaL sahiththaaraE

விலையேறப் பெற்ற திரு இரத்தமே – அவர்
vilaiyErap petra thiru raththamaE -avar
விலாவில் நின்று பாயுதே
vilaavil nintru paayuthaE
  விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற
  vilaiyErap petrOnaai unnai maatra
  விலையாக ஈந்தனரே -2
  vilaiyaaha yeenthanaraE

பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
pon veLLiyO maNNin vaazhvO
இவ்வன்புக் கிணையாகுமோ 
ivaanbuk kiNaiyaahumO
  அன்னையிலும் அன்பு வைத்தே
  annaiyilum anbu vaiththaE
  தன் ஜீவனை ஈந்தாரே -2
  than jeevanai yeenthaaraE

சிந்தையிலே பாரங்களும்
sinthaiyilaE paarangaLum
நிந்தைகள்  ஏற்றவராய்
ninthaihaL yEtravaraai  
  தொங்குகிறார் பாதகன் போல்
  thonguhiraar paathahan pOl
  மங்கா வாழ்வளிக்கவே -2
  mangaa vaazhvaLikkavaE