Oppu koduththeer iyya | ஓப்புக் கொடுத்தீர் ஐயா

ஓப்புக் கொடுத்தீர் ஐயா
oppuk koduththeer iyya
உம்மையே எனக்காக
ummaiyaE enakkaaha        (2)
உலகின் இரட்சகரே
ulahin ratchaharaE
உன்னத பலியாக
unnatha baliyaaha

எங்களை வாழவைக்க
engaLai vaazha vaikka
சிலுவையில் தொங்கினீர் -2
siluvaiyil thongineer
  நோக்கிப் பார்த்ததினால்
  nOkkip paarththathinaal
  பிழைத்துக் கொண்டோம் ஐயா -2 -ஓப்புக் கொடுத்தீர் 
  pizhaiththuk koNdOm iyya

நித்திய ஜீவன் பெற
niththiya jeevan pera
நீதிமானாய் மாற -2
neethimaanaai maara
  ஜீவன் தரும் கனியாய்
  jeevan tharum kaniyaai
  சிலுவையில் தொங்கினீர் -2 -ஓப்புக் கொடுத்தீர் 
  siluvaiyil thongineer

சுத்திகரித்தீரே
suththikariththeeraE
சொந்த ஜனமாக -2
sontha janamaaha
  உள்ளத்தில் வந்தீர் ஐயா
  uLLaththil vantheer iyya
  உமக்காய் வாழ்ந்திட -2 -ஓப்புக் கொடுத்தீர் 
  umakkaai vazhnthida

பாவத்திற்கு மரித்து
paavaththirku mariththu
நீதிக்கு பிழைத்திட -2
neethikku pizhaiththida
  உம் திரு உடலிலே
  um thiru udalilaE
  என் பாவம் சுமந்தீர் ஐயா -2 -ஓப்புக் கொடுத்தீர் 
  en paavam sumantheer iyya

மீட்கும் பொருளாக
meetkum poruLaaha
உம் இரத்தம் தந்தீர் ஐயா -2
um raththam thantheer iyya
  சாத்தானை தோற்கடித்து
  saaththaanai thOrkadiththu
  சாவையும் வென்றீர் ஐயா -2 -ஓப்புக் கொடுத்தீர் 
  saavaiyum venteer iyya

என்னையே தருகிறேன்
ennaiyaE tharuhiraEn
ஜீவபலியாக -2
jeevapaliyaaha
  உகந்த காணிக்கையாய்
  uhantha kaaNikkaiyaai
  உடலைத் தருகிறேன் -2 -ஓப்புக் கொடுத்தீர் 
  udalaith tharuhiraEn