NanmaigaL seiythavarkku | நன்மைகள் செய்தவர்க்கு

நன்மைகள் செய்தவர்க்கு
nanmaihaL seiythavarkku
நன்றியுள்ள ஆராதனை
nantriyuLLa aaraathanai (2)
நாள்தோறும் செலுத்துகிறேன்
naaL thOrum seluththuhiraEn
நாளெல்லாம் செலுத்துகிறேன்
naaLellaam seluththuhiraEn

நன்றியப்பா இயேசப்பா -4 -நன்மைகள்

இமைப்பொழுதும் என்னை நீர் கைவிடவில்லை
imaippozhuthum ennai neer kai vidavillai
நிமிடம் தோறும் விசாரித்து நடத்துகிறீர் -2
nimidam thOrum visaariththu nadaththuhireer
நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது -என்
naatkaLellaam um karaththil irukkirathu -en
வருஷங்களை(வருஷமெல்லாம்)நன்மையினால் முடிசூட்டினீர் -சென்ற -நன்றியப்பா
varushangaLai(varushamellaam) nanmaiyinaal mudisoottineer -sentra

உலகம் என்னைத் தூற்றும் போது தேற்றினீரைய்யா
ulaham ennai thootrum pOthu thEtrineeraiyaa
உறவெல்லாம் வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே -2
uravellaam veruththa pOthu anbu koorntheeraE
நண்பன் என்னைப் பகைத்தப் போது நண்பனானீரே -2
naNban ennai pahaiththa pOthu naNbanaaneeraE
உண்மையில்லா என்னையும் நீர் தேடி வந்தீரே -2-நன்றியப்பா
uNmaiyillaa ennaiyum neer thEdi vantheeraE

பாவ சேற்றில் இருந்த என்னை தூக்கியெடுத்தீரே
paava sEtril iruntha ennai thookki yeduththeeraE
நாற்றமெல்லாம் கழுவி உந்தன் மார்பில் அணைத்தீரே -2
naatramellaam kazhuvi unthan maarbil aNaiththeeraE
அனுதினமும் அபிஷேகித்து மகிழ்விக்கிறீரே -2
anudhinamum abishEhiththu mahizhvikkireer
அப்பா உந்தன் சித்தம் செய்ய பழக்குவித்தீரே(பயிற்றுவித்தீரே) -2--நன்றியப்பா
appa unthan siththam seiyya pazhakkuviththeeraE(payitruviththeeraE)

நன்மைகள் செய்தவரே
nanmaihaL seiythavaraE
நன்றியுள்ள ஆராதனை
nantriyuLLa aaraathanai (2)
உமக்கே செலுத்துகிறேன்
umakkaE seluththuhiraEn

உயிருள்ள நாளெல்லாம்
uyiruLLa naaLellaam