Neer seiytha nanmaihaLai ninaikkintraEn | நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
neer seiytha nanmaihaLai ninaikkintraEn
உம் பாதம் விழுந்து நன்றி சொல்கிறேன்
um paatham vizhunthu nantri solhiraEn
உம் வல்ல செயல்களை நினைக்கின்றேன்     (2)
um valla seyalhaLai ninaikkintraEn
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
Oyaamal muththam seiyhiraEn

என்னை மன்னித்தீரே உம் தூய இரத்தத்தால்
ennai manniththeeraE um thooya raththaththaal
என்னை தூக்கினீரே உம் பாசக் கரத்தால்
ennai thookkineeraE um paasa karaththaal
என்னைத் தாங்கினீரே உம் கிருபையால்
ennai thaangineeraE um kirubaiyaal
எனக்காக பூலோகம் வந்தவரே
enakkaaha poolOham vanthavaraE
என் மீறுதலுக்காய் காயப்பட்டீர்
en meeruthalukkaai kayappatteer
என் அக்கிரமத்திற்காய் நொறுக்கப்பட்டீர்
en akiramaththirkaai norukkappatteer
என் துக்கங்களெல்லாம் சுமந்து கொண்டீர்
en thukkangaLellaam sumanthu koNdeer
எனக்காக சமாதான பலியானீர்
enakkaaha samaathaana baliyaaneer

உம்மைப்போல தெய்வம் யாருமில்ல -(2)
ummai pOla deivam yaarumilla

தொலைந்த நேரத்தில் நல்ல மேய்ப்பனாய்
tholaintha nEraththil nalla mEippanaai
தேடி வந்தீர் உம் தோளில் தூக்கினீர்
thEdi vantheer um thOLil thookkineer
அழுது நொந்த நேரங்களெல்லாம்
azhuthu nontha nErangaLellaam
ஒரு தாயைப்போல என்னை ஆற்றித் தேற்றீனீர்
oru thaayai pOla ennai aatri thEtrineer
நடக்க முடியாத நேரங்களெல்லாம்
nadakka mudiyaatha nErangaLellaam
ஒரு தந்தை போல என்னை தூக்கி சுமந்தீர்
oru thanthai pOla ennai thookki sumantheer
பறந்து காக்கும் ஒரு பட்சியைப் போல
paranthu kaakkum oru patchiyaip pOla
உம் சிறகுகளால் என்னை மூடி அணைத்தீர்
um sirahuhaLaal ennai moodi aNaiththeer

உம்மைப் போல தெய்வம் யாருமில்லை -(2)
ummai pOla deivam yaarumilla

தளர்ந்த நேரத்தில் நல்ல தோழனாய்
thaLarntha nEraththil nalla thOzhanaai
உம் தோள் கொடுத்தீர் கூடவே நின்றீர்
um thOL koduththeer koodavaE ninteer
உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
udaikkappatta nErangaLellaam
காயம் கட்டினீர் நல்ல சமாரியனாய்
kaayam kattineer nalla samaariyanaai
வியாதிகள் வந்த நேரமெல்லாம்
viyaathihaL vantha nEramellaam
பரிகாரியாய் வந்து குணமாக்கினீர்
parihaariyaai vanthu guNamaakkineer
துன்பத்தில் தாங்கும் மணவாளனாய்
thunbaththil thaangum maNavaaLanaai
மனமிரங்கி என்னை மகிழச்செய்தீர்
manamirangi ennai mahizha seiytheer

உம்மைப் போல தெய்வம் யாருமில்லை -(2)-என்னை மன்னித்தீரே
ummai pOla deivam yaarumilla