Paatham ondraE vENdum | பாதம் ஒன்றே வேண்டும்

பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
paatham ondraE vENdum -intha
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்
paaril enakku matraEthum vENdaam -un

நாதனே, துங்கமெய் – வேதனே, பொங்குநற்
naathanaE thunga mei vEthanaE pongu nar
காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ்செய்ய — பாதம்
kaathaludan thuyya thoothar thozhunj seiya 

சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்
seerum puyalinaal vaarithi pongida
பாரில் நடந்தாற் போல் – நீர்மேல் நடந்த உன் — பாதம்
paaril nadanthaar pOl neer mEl nadantha un

வீசும் கமழ் கொண்ட – வாசனைத் தைலத்தை
veesum kamazh koNda vaasanai thailaththai
ஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற் — பாதம்
aasaiyudan mari poosi paNintha por

போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,
pOkkida matra em aakkinai yaavaiyum
நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற் — பாதம்
neekkidavaE maranth thookki nadantha nar

நானிலத்தோர் உயர் – வான் நிலத் தேற வல்
naanilaththOr uyar vaan nilath thEra val
ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த உன் —பாதம்
aaNi thuLaiththida thaanaE koduththa un

பாதம் அடைந்தவர்க் – காதரவாய்ப் பிர
paatham adainthavark kaatharavaai pira
சாதம் அருள் யேசு – நாதனே, என்றும் உன் — பாதம்
saatham aruL yEsu naathanaE entrum un