Paava sanjalaththai neekka | பாவ சஞ்சலத்தை நீக்க

பாவ சஞ்சலத்தை நீக்க
paava sanjalaththai neekka
பிராண நண்பர் தானுண்டே 
piraaNa naNbar thaan undaE
பாவ பாரம் தீர்ந்து போக
paava paaram theernthu pOha
மீட்பர் பாதம் தஞ்சமே
meetpar paatham thanjamaE
சால துக்க துன்பத்தாலே
saala thukka thunbaththaalaE
நெஞ்சம் நொந்து சோருங்கால்
nenjam nonthu sOrungaal
துன்பம் இன்பமாக மாறும்
thunbam inbamaaha maarum
ஊக்கமான ஜெபத்தால்
ookkamaana jebaththaal

கஷ்ட நஷ்டமுண்டானாலும்
kashta nashtamuNdaanaalum
இயேசுவண்டை சேருவோம்
yEsuvaNdai sEruvOm
மோசம் நாசம் நேரிட்டாலும்
mOsam naasam nErittaalum
ஜெப தூபம் காட்டுவோம்
jeba thoobam kaattuvOm
நீக்குவாரே நெஞ்சின் நோவை
neekkuvaaraE nenjin nOvai
பெலவீனம் தாங்குவார்
belaveenam thaanguvaar
நீக்குவாரே மனச் சோர்வை
neekkuvaaraE mana sOrvai
தீய குணம் மாற்றுவார்
theeya guNam maatruvaar

பெலவீனமான போதும்
belaveenamaana pOthum
கிருபாசனம் உண்டே
kirupaasanam uNdaE
பந்து ஜனம் சாகும்போதும்
panthu janam saahum pOthum
புகலிடம் இயேசுவே
puhalidam yEsuvaE
ஒப்பில்லாத பிராண நேசா
oppillaatha piraaNa nEsaa
உம்மை நம்பி நேசிப்போம்
ummai nambi nEsippOm
அளவற்ற அருள் நாதா
aLavatra aruL naathaa
உம்மை நோக்கி கெஞ்சுவோம்!
ummai nOkki kenjuvOm