Pareer arunOdhayam pOl | பாரீர் அருணோதயம் போல்

பாரீர் அருணோதயம் போல்
paareer aruNOthayam pOl
உதித்து வரும் இவர் யாரோ
uthiththu varum ivar yaarO
  முகம் சூரியன் போல் பிரகாசம்
  muham sooriyan pOl pirahaasam
  சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல -2
  saththam peru veLLa iraichchal pOlaE

இயேசுவே ஆத்ம நேசரே
yEsuvaE aathma nEsaraE
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
saarOnin rOjaavum leeli pushpamumaam
  பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ
  pathinaayirangaLil siranthOr

காட்டு மரங்களில் கிச்சிலி போல்
kaattu marangaLil kichchili pOl
எந்தன் நேசர் அதோ நிற்கிறார் -2
enthan nEsar athO nirkiraar
  நாமம் ஊற்றுண்ட பரிமளமே
  naamam ootruNda parimaLamaE
  இன்பம் ரசத்திலும் அதி மதுரம்-2 – இயேசுவே
  inba rasaththilum athi mathuram

அவர் இடது கை என் தலை கீழ்
avar idathu kai en thalai keezh
வலக்கரத்தாலே தாங்குகிறார்  -2
valak karaththaalaE thaangukiraar
  அவர் நேசத்தால் சோகமானேன்
  avar nEsaththaal sOhamaanaEn
  என் மேல் பறந்த கோடி நேசமே -2– இயேசுவே
  en mEl parantha kodi nEsamaE

என் பிரியமே ரூபவதி
en piriyamaE roopavathi
என அழைத்திடும் இன்ப சத்தம் -2
ena azhaiththidum inba saththam
  கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
  kEttu avar pinnaE OdiduvaEn
  அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் -2 – இயேசுவே
  avar samuhaththil mahizhnthiduvaEn

என் நேசர் என்னுடையவரே
en nEsar ennudaiyavaraE
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் -2
avar maarbinil saainthiduvaEn
  மணவாளியே வா என்பாரே
  maNavaazhiyaE vaa enbaaraE
  நானும் செல்வேன் அந்நேரமே  -2– இயேசுவே
  naanum selvaEn annEramaE