Siluvai naathar yEsuvin | சிலுவை நாதர் இயேசுவின்

சிலுவை நாதர் இயேசுவின்
siluvai naathar yEsuvin
பேரொளி வீசிடும் தூய கண்கள் -2
pEroLi veesidum thooya kaNhaL
  என்னை நோக்கிப் பார்க்கின்றன – தம்
  ennai nOkkip paarkkintrana -tham
  காயங்களையும் பார்க்கின்றன -2
  kaayangaLaiyum paarkkintrana

என் கையால்  பாவங்கள் செய்திட்டால்
en kaiyaal paavangaL seiythittaal
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே -2
tham kaiyin kaayangaL paarkkintaaraE
  தீய வழியில் என் கால்கள் சென்றதால்
  theeya vazhiyil en kaalhaL sentraal
  தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே -2 -சிலுவை நாதர் 
  tham kaalin kaayangaL paarkkintaaraE

தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
theettuLLa eNNam en idhayam koNdaal
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் -2
yeetti paaintha nenjai nOkkuhintaar
  வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
  veeN perumai ennil idam petraal
  முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் -2-சிலுவை நாதர் 
  muLmudi paarththida yEnguhintaar

திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
thirunthidaa paavikkaai azhuhintaar
வருந்திடா பிள்ளைக்காய்க் கலங்குகின்றார் -2
varunthidaa piLLaikkaai kalanguhintaar
  தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
  tham kaNNeer kaayaththil vizhunthida
  கண்ணீரும், இரத்தமும் சிந்துகின்றார் -2-சிலுவை நாதர் 
  kaNNeerum raththamum sinthuhintaar

அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
avar raththam en paavam kazhuvidum
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் -2
avar kaNNeer ennai meruhEtridum
  கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
  kalangarai viLakaaha oLi veesuvaEn
  கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் -2-சிலுவை நாதர் 
  kalanguvOrai avar manthai sErppaEn