siluvai nizhalil anidhinam adiyaan
சாய்ந்திளைப்பாறிடுவேன் – ஆ! ஆ!
saainthiLaippaariduvaEn -aa..aa..
சிலுவையின் அன்பின் மறைவில்
siluvaiyin anbin maraivil
கிருபையின் இனிய நிழலில் -2
kirubaiyin iniya nizhalil
ஆத்தும நேசரின் அருகில் -2
aaththuma nEsarin aruhil
அடைகிறேன் ஆறுதல் மனதில் -சிலுவை நிழலில்
adaihiraEn aaruthal manathil
பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே
paava paara sumaiyathaal sOrnthaE
தளர்ந்த என் ஜீவியமே – ஆ! ஆ!
thaLarntha en jeeviyamaE -aa..aa..
சிலுவையண்டை வந்ததினால்
siluvaiyaNdai vanthathinaal
சிறந்த சந்தோஷங் கண்டதினால் -2
sirantha santhOsham kaNdathinaal
இளைப்படையாது மேலோகம் -2
iLaippadaiyaathu mElOham
ஏகுவேன் பறந்தே வேகம்-சிலுவை நிழலில்
yEhuvaEn paranthaE vEham
இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்
inbam suranthidum thirumozhi kEttaEn
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ! ஆ!
innalhaL maranthiduvaEn -aa..aa..
திருமறை இன்னிசை நாதம்
thirumarai innisai naatham
தேனிலு மினிய வேதம் -2
thEnilum iniya vEdham
தருமெனக்கனந்த சந்தோஷம் -2
tharumenakkanantha santhOsham
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்-சிலுவை நிழலில்
theerkkumen idhayaththin thOsham
எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன்
evvitha kodiya idarukkum anjaEn
இயேசுவைச் சார்ந்து நிற்பேன் – ஆ! ஆ!
yEsuvai saarnthu nirpaEn
அவனியில் வியாகுலம் வந்தால்
avaniyil viyaahulam vanthaal
அவரையே நான் அண்டிக்கொண்டால் -2
avaraiyaE naan aNdikkoNdaal
அலைமிக மோதிடு மந்நாள்
alai miha mOthidum aNNaaL
ஆறுதல் அளிப்பாரே சொன்னால்-சிலுவை நிழலில்
aaruthal aLippaaraE sonnaal