Thaai madiyil thavazhuhintra | தாய் மடியில் தவழுகின்ற

தாய் மடியில் தவழுகின்ற
thaai madiyil thavazhuhintra
குழந்தையைப் போல‌
kuzhanthaiyai pOla                    (2)
தகப்பனே  உம்மடியில்
thahappanaE um madiyil
சாய்ந்துவிட்டேன் நான்
saainthu vittaEn naan

கவலையில்லையே கலக்கம் இல்லையே -2
kavalai illaiyaE kalakkam illaiyaE
  கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் -நான்
  karththar karam pidiththuk koNdaEn -naan
எதைக் குறித்தும் பயமில்லையே -2
yethai kuriththum bayamillaiyaE
  என் நேசர் நடத்துகிறீர் -தினம் -தாய் மடியில் 
  en nEsar nadaththuhireer -thinam

செய்த நன்மைகள் நினைக்கின்றேன் -2
seiytha nanmaigaL ninaikkintraEn
  நன்றியோடு துதிக்கின்றேன்-நான்
  nantriyOdu thuthikkintraEn -naan
கைவிடாத என் ஆயனே -என்னை
kaividaatha en aayanaE -ennai
  கல்வாரி நாயாகனே -என் -தாய் மடியில் 
  kalvaari naayahanaE -en

துணையாளரே துணையாளரே -2
thuNaiyaaLaraE thuNaiyaaLaraE
  இணையில்லா மணவாளரே -என்
  iNaiyillaa maNavaaLaraE
உணவாக வந்தீரையா-2
uNavaaha vantheeraiyaa
  என் உயிரோடு கலந்தீரையா -2-தாய் மடியில் 
  en uyirOdu kalantheeriah

உம்மைத் தானே பற்றிக் கொண்டேன் -2
ummai thaanaE patri koNdaEn
  உம் தோளில் அமர்ந்துவிட்டேன் -நான்
  um thOLil amarnthu vittaEn -naan
உந்தன் சிறகுகள் நிழ்ல்தனிலே -2
unthan sirahuhaL nizhal thanilaE
  உலகத்தையே மறந்துவிட்டேன் -இந்த -தாய் மடியில் 
  ulahaththaiyaE maranthu vittaEn -intha

அதிகாலமே தேடுகிறேன் -2
athikaalaiyil thEduhiraEn
  ஆர்வமுடன் நாடுகிறேன்  -நான்
  aarvamudan naaduhiraEn
உயிர் வாழும் நாட்களெல்லாம் -2
uyir vaazhum naatkaLellaam
  உம் நாமம் சொல்வேனையா -நான் -தாய் மடியில் 
  um naamam solvEnaiyaa

சாய்ந்து விட்டேன் நான் -2
saainthu vittaEn naan