ThOthiram thuthi paaththiraa | தோத்திரம் துதி பாத்திரா

தோத்திரம் துதி பாத்திரா உம்மை
thOththiram thuthi paaththiraa ummai
இன்றும் என்றும் துதித்திடுவேன் -2
intrum entrum thuthiththiduvaEn

காத்தீரே என்னைக் கருத்தாக
kaaththeeraE ennai karuththaaha
வழுவாமல் என்னை உமக்காக -2
vazhuvaamal ennai umakkaaha
 எடுத்தீர் எனையும் உமக்காக -2
 yeduththeer enaiyum umakkaaha
கொடுத்தீர் உமையும் எனக்காக — தோத்திரம்
koduththeer umaiyum enakkaaha

வல்ல வான ஞான விநோதா
valla vaana gnana vinOdha
துதியே துதியே துதித்திடுவேன் -2
thuthiyaE thuthiyaE thuthiththiduvaEn
  எல்லாக் குறையும் தீர்த்தீரே
  ellaa kuraiyum theerththeeraE
  தொல்லை யாவும் தொலைத்தீரே -2
  thollai yaavum tholaiththeeraE
அல்லல் யாவும் அறுத்தீரே -2
allal yaavum aruththeeraE
 அலையும் எனையும் மீட்டீரே — தோத்திரம்
 alaiyum enaiyum meeteeraE

நம்பினோரைக் காக்கும் தேவா
nambinOraik kaakkum dEva
துதியே துதியே துதித்திடுவேன் -2
thuthiyaE thuthiyaE thuthiththiduvaEn
  அம்புவி யாவும் படைத்தீரே
  ambuvi yaavum padaiththeeraE
  அம்பரா உந்தன் வாக்காலே -2
  ambaraa unthan vaakkaalaE
எம்பரா எல்லாம் ஈந்தீரே -2
embaraa ellaam yeentheeraE
 நம்பினோர்க் குந்தன் தயவாலே — தோத்திரம்
 nambinOrk kunthan thayavaalaE

கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
kaNNin maNi pOl kaaththeeraE emmai
துதியே துதியே துதித்திடுவேன் -2
thuthiyaE thuthiyaE thuthiththiduvaEn
  அண்ணலே உந்தன் அருளாலே
  aNNalaE unthan aruLaalaE
  அடியாரைக் கண் பார்த்தீரே -2
  adiyaaraik kaN paarththeeraE
மன்னா எமக்கும் நீர் தாமே -2
mannaa emakkum neer thaamaE
 எந்நாளும் எங்கள் துணை நீரே — தோத்திரம்
 ennaaLum engaL thuNai neeraE

தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
theeyOn ambuhaL thaakkaathaE emmai
துதியே துதியே துதித்திடுவேன் -2
thuthiyaE thuthiyaE thuthiththiduvaEn
  தேவா நீர் உந்தன் சிறகாலே
  dEvaa neer unthan sirahaalaE
  தினமும் மூடிக் காத்தீரே -2
  thinamum moodi kaaththeeraE 
தீதணு காதும் மறைவினிலே -2
theethaNu kaathum maraivinilaE
 தேடி யுமதடி தங்கிடுவேன் — தோத்திரம்
 thEdi yumathadi thangiduvaEn

அல்லேலூயா தோத்திரமே
allEluyah thOththiramaE
துதியே துதியே துதித்திடுவேன் -2
thuthiyaE thuthiyaE thuthiththiduvaEn
  அகில சிருஷ்டிகளும் துதிக்க
  ahila sirushtihaLum thuthikka
  அடிமை துதியா திருப்பேனோ ? -2
  adimai thuthiyaa thiruppaEnO
அல்லும் பகலும் நித்தியமாய் -2
allum pahalum niththiyamaai
  அன்பே உமையும் துதித்திடுவேன் — தோத்திரம்
  anbaE umaiyum thuthiththiduvaEn


Song Arrangement
----------------- 
Time: 4/4

1          4      1     4            1         4      1      5
Thoth-thi-ram thuthi paath-thi-raa ummai
1             5             1
Intrum entrum thuthiththidu-vaEn - 2

1                       5
KaaththeeraE ennai karuththaaha
1                      4   1
Vazhuvaamal ennai umak-kaa-ha - 2
1           5       4 
Yeduththeer enaiyum umakkaaha - 2
4                      1             5             1
Koduththeer umaiyum enakkaa-ha - Thothiram