ThOththiram seiyvEnE | தோத்திரம் செய்வேனே

தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்
thOththiram seiyvEnaE -ratchahanai
தோத்திரம் செய்வேனே
thOththiram seiyvEnaE

பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
paaththiramaaha immaathiram karuNai vaiththa
பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் — தோத்திரம்
paarththipanai yUtha kOththiranai entrum

அன்னை மரி சுதனை – புல்மீது
annai mari suthanai -pul meethu
அமிழ்துக் கழுதவனை,
amizhthu kazhuthavanai
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
munnaNai meethutra chinna kumaaranai
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை — தோத்திரம்
munnurai noorpadi innila thutrOnai

கந்தை பொதிந்தவனை – வானோர்களும்
kanthai pothinthavanai -vaanOrhaLum
வந்தடி பணிபவனை,
vanthadi paNipavanai
மந்தையர்க் கானந்த மாட்சி யளித்தோனை,
manthaiyar kaanantha maatchi yaLiththOnai
வான பரன் என்னும் ஞான குணவானை — தோத்திரம்
vaana paran ennum gnana guNavaanai

செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்
sempon nuruvaanai -thEseekarhaL
தேடும் குருவானை,
thEdum guruvaanai
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
ambara mEviya umbar gaNaththOdu
அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி — தோத்திரம்
anbu pera nintru paim pon malar thoovi