Nalla deivam yEsu | நல்ல தெய்வம் இயேசு

நல்ல தெய்வம் இயேசு 
nalla deivam yEsu
நன்றி சொல்லி பாடிடு 
nantri solli paadidu
வல்ல தெய்வம் இயேசு 
valla deivam yEsu
முழு மனதோடு போற்றிடு 
muzhu manathOdu pOtridu
  ஆராதனை ஆராதனை -2
  aaraathanai aaraathanai

உன்னை வாலாக்காமல் 
unnai vaalaakkaamal
உன்னை தலையாக்குவார்    (2)
unnai thalaiyaakkuvaar
உன்னை கீழாக்காமல் 
unnai keezhaakkaamal
உன்னை மேலாக்குவார் - நல்ல தெய்வம்
unnai mElaakkuvaar

உந்தன் வலப்புறத்திலும் 
unthan valappuraththilum
உந்தன் இடப்புறத்திலும்       (2)
unthan idappuraththilum
இடங்கொண்டு உன்னை 
idangkoNdu unnai
பெருகச் செய்வார் - நல்ல தெய்வம்
peruha seiyvaar

நீ போகையிலும் 
nee pOhaiyilum
நீ வருகையிலும்     (2)
nee varuhaiyilum
எந்நாளுமே உன்னை 
ennaaLumaE unnai
ஆசீர்வதிப்பார்- நல்ல தெய்வம்
aaseervathippaar