நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கெனவே கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவம் அவர் தோள் மேல் இருக்கும்
அதிசயமானவர் அவரே
ஆலோசனைக் கர்த்தர் அவரே
இயேசு என்னும் நாமம் உடையவரே -2
ஏதேனிலே உண்டானதோர்
பாவத்தின் கரை நீக்க பிறந்தார் (2)
கல்வாரியில் பலியாகவே
காருண்ய தேவன் பிறந்தார்
காருண்ய தேவன் பிறந்தார் -நமக்கொரு
சீயோனிலும் யூதாவிலும்
தாலாட்டும் ஒரு பாடல் கேட்கும் (2)
என் இயேசுவின் பெயர் கேட்டதும்
முள் கூடப் பூவாகப் பூக்கும்
முள் கூடப் பூவாகப் பூக்கும் -நமக்கொரு