Pavani selhintaar raasaa | பவனி செல்கின்றார் ராசா


பவனி செல்கின்றார் ராசா – நாம்
pavani selhintaar raasaa-naam
பாடிப் புகழ்வோம் நேசா! -2
paadip puhazhvOm nEsaa
  அவனிதனிலே மறிமேல் ஏறி
  avanithanilaE marimEl yEri
  ஆனந்தம் பரமானந்தம். -2— பவனி
  aanantham paramaanantham

எருசலேமின் பதியே! – சுரர்
yerusalEmin pathiyaE -surar
கரிசனையுள்ள நிதியே! -2
karisanaiyuLLa nathiyaE
  அருகில் நின்ற அனைவர் போற்றும்
  aruhil nintra anaivar pOtrum
  அரசே, எங்கள் சிரசே! -2— பவனி
  arasaE engaL sirasaE

பன்னிரண்டு சீடர் சென்று – நின்று
pannireNdu seedar sentru -nintru
பாங்காய் வஸ்திரம் விரிக்க -2
paangaai vasthiram virikka
  நன்னயம் சேர் மனுவின் சேனை
  nannayam sEr manuvin sEnai
  நாதம் கீதம் ஓத. — -2-பவனி
  naathan keetham Otha

குருத்தோலைகள் பிடிக்க, – பாலர்
kuruththOlaihaL pidikka -paalar
கும்பல் கும்பலாய் நடக்க  -2
kumabal kumbalaai nadakka
  பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
  peruththa thoniyaai Osannaventru
  போற்ற மனம் தேற்ற.-2-பவனி
  pOtra manam thEtra