PErinba nathiyaE | பேரின்ப நதியே

பேரின்ப நதியே தாகத்தை தீர்த்திட 
pErinba nathiyaE thaahaththai theerththida
  பின்மாரியாக பொழிந்திடுமே -2
  pinmaariyaaha pozhinthidumaE
பேரின்ப நதியே..
pErinba nathiyaE..

எலியாவின் தேவன் எங்கே என்றானே 
yeliyaavin dEvan engaE entraanaE
சலியாமல் ஓடி சால்வை பெற்றானே -2 
saliyaamal Odi saalvai petraanaE
  பரலோக ராஜ்ஜியம் பரிசுத்தவான்கள் 
  paralOha raajjiyam parisuththavaanhaL
பலவந்தமாக்கும் காலம் இதுவே -2 -பேரின்ப நதியே
balavanthamaakkum kaalam ithuvaE

மங்கும் திரிகள் நெரிந்த நாணல் 
mangum thirihaL nerintha naaNal
தேங்கும் தண்ணீர்கள் போன்ற அநேகர்  -2
thEngum thaNNeerhaL pOntra anEhar
  அனலுமில்லாத குளிருமில்லாத 
  analumillaatha kuLirumillaatha
அனுபவத்தோடே  ஜீவிக்கின்றாரே  -2-பேரின்ப நதியே
anupavaththOdaE jeevikkintaaraE

சவுலை பவுலாய் மாற்றிடும் தேவா 
savulai pavulaai maatridum dEvaa
சடுதி ஒளியால் சந்திக்கும் மூவா -2
saduthi oLiyaal santhikkum moovaa
  உலரும் எலும்பும் உயிரை அடையும் 
  ularum yelumbum uyirai adaiyum
உயிர் மீட்சி தாரும் என் இயேசு நாதா -2-பேரின்ப நதியே
uyir meetchi thaarum en yEsu naathaa

பரிசுத்த ஆவி பெற்றிட வாரீர் 
parisuththa aavi petrida vaareer
பரிசுத்த தேவ அழைப்பைப் பாரீர் -2
parisuththa dEvaa azhaippai paareer
  தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன் 
  thEdungaL kidaikkum kELungaL tharuvaEn
தட்டுங்கள் திறப்பேன் என்றுரைத்தாரே -2-பேரின்ப நதியே
thattungaL thirappaEn entruraiththaaraE