Kai thatti paadi mahizhnthiruppOm | கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்
kai thatti paadi mahizhnthiruppOm
கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம் -2
karththar samuhaththil kaLikooruvOm
  களிகூறுவோம் களிகூறுவோம்
  kaLikooruvOm kaLikooruvOm
  கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்
  karththar sonna vaakkuththaththam solli mahizhvOm
  களிகூறுவோம் களிகூறுவோம்
  kaLikooruvOm kaLikooruvOm
  கவலைகள் மறந்து களிகூறுவோம் -கைதட்டி
  kavalaihaL maranthu kaLikooruvOm

நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்
ninaippatharkum naan jebippatharkum
அதிகமாய் செய்திடுவார் -2 -களிகூறுவோம் 
athihamaai seiythiduvaar

பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் 
bayappadaathaE unnai meettuk koNdaEn
எனக்கே நீ சொந்தம் என்றார் -2-களிகூறுவோம் 
enakkaE nee sontham entaar

நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்
nanmaiyum kirubaiyum nammai thodarum
ஜீவனுள்ள நாட்களெல்லாம் -2-களிகூறுவோம் 
jeevanuLLa naatkaLellaam

அறிவு புகட்டுவார் பாதை காட்டுவார்
arivu pahattuvaar paathai kaattuvaar
ஆலோசனை அவர் தருவார் -2-களிகூறுவோம் 
aalOsanai avar tharuvaar

ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்
aabaththu kaalaththil nOkki kooppittaal
அவர் நம்மை விடுவிப்பாரே-2-களிகூறுவோம் 
avar nammai viduvippaaraE

வாலாக்காமல் அவர் தலையாக்குவார்
vaalaakkaamal avar thalaiyaakkuvaar
கீழாக்காமல் மேலாக்குவார் -2-களிகூறுவோம் 
keezhaakkaamal mElaakkuvaar

உள்ளங்கையில் அவர் பொறித்துள்ளார்
uLLangkaiyil avar porinthuLLaar
அவர் உன்னை மறப்பதில்லை -2-களிகூறுவோம் 
avar unnai marappathillai