கலங்காதே மகனே
kalangaathaE mahanaE
கலங்காதே மகளே -2
kalangaathaE mahaLaE
கன்மலையாம் கிறிஸ்து
kanmalaiyaam kirisththu
கைவிடவே மாட்டார் -3
kaividavaE maattaar
மலைகள் பெயர்ந்து போகலாம்
malaihaL peyarnthu pOhalaam
குன்றுகள் அசைந்து போகலாம் -2
kuntruhaL asainthu pOhalaam
மனதுருகும் தேவன்
manathuruhum dEvan
மாறிடவே மாட்டார் -3 -கலங்காதே
maaridavaE maattaar
உலகம் வெறுத்துப் பேசலாம்
ulaham veruththu pEsalaam
காரணமின்றி நகைக்கலாம் -2
kaaraNamintri nahaikkalaam
உன்னை படைத்தவரோ
unnai padaiththavarO
உள்ளங்கையில் ஏந்துவார் -3-கலங்காதே
uLLangkaiyil yEnthuvaar
தீமை உன்னை அணுகாது
theemai unnai aNuhaathu
துன்பம் உறைவிடம் நெருங்காது -2
thunbam uraividam nerungaathu
செல்லும் இடமெல்லாம்
sellum idamellaam
தூதர்கள் காத்திடுவார் -3-கலங்காதே
thootharhaL kaaththiduvaar