மகிமை மாட்சிமை நிறைந்தவரை !
mahimai maatchimai nirainthavaraE
மகிழ்வுடன் தொழுதிடுவோம் -2
mahizhvudan thozhuthiduvOm
பரிசுத்த தேவனாம் இயேசுவை
parisuththa dEvanaam yEsuvai
பணிந்தே தொழுகுவோம் -மகிமை
paNinthaE thozhuhuvOm
உன்னத தேவன் நீரே!
unnatha dEvan neeraE
ஞானம் நிறைந்தவரே -2
gnanam nirainthavaraE
முழங்கால் யாவுமே
muzhangaaL yaavumaE
பாரினில் முடங்கிடுதே
paarinil mudangiduthaE
உயர்ந்தவரே சிறந்தவரே!
uyarnthavaraE siranthavaraE
என்றும் தொழுதிடுவோம் – மகிமை
entrum thozhuthiduvOm
ஒருவரும் சேரா ஒளியில்
oruvarum sEraa oLiyil
வாசம் செய்பவரே! -2
vaasam seiybavaraE
ஒளியினை தந்துமே
oLiyinai thanthumaE
இதயத்தில் வாசம் செய்யும்
idhayaththil vaasam seiyyum
ஒளிநிறைவே அருள் நிறைவே!
oLi niraivaE aruL niraivaE
என்றும் தொழுதிடுவோம் -2– மகிமை
entrum thozhuthiduvOm
பரிசுத்த தேவன் நீரே!
parisuththa dEvan neeraE
பாதம் பணிந்திடுவோம் -2
paatham paNinthiduvOm
கழுவியே நிறுத்தினீரே
kazhuviyaE niruththineraE
சத்திய தேவன் நீரே!
saththiya dEvan neeraE
கனம் மகிமை செலுத்தியே நாம்
ganam mahimai seluththiyaE naam
என்றும் தொழுதிடுவோம் -2– மகிமை
entrum thozhuthiduvOm
நித்திய தேவன் நீரே!
niththiya dEvan neeraE
நீதி நிறைந்தவரே! -2
neethi nirainthavaraE
அடைக்கலமானவரே!
adaikkalamaanavaraE
அன்பு நிறைந்தவரே!
anbu nirainthavaraE
நல்லவரே வல்லவரே!
nallavaraE vallavaraE
என்றும் தொழுதிடுவோம் -2– மகிமை
entrum thozhuthiduvOm