Nirmoolamaahathiruppathu unthan maa kirubai | நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
nirmoolamaahaathiruppathu unthan maa kirubai
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் -2
mudivaE illaathathu unthan manathurukkam
  கிருபை கிருபை
  kirubai kirubai
  மாறாத கிருபை -2
  maaraatha kirubai

கிருபையினாலே இரட்சித்தீரே
kirubaiyinaalaE ratchiththeeraE
நீதிமானாக மாற்றினீரே – 2
neethimaanaaha maatrineeraE
  உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
  uyirththezha seiytheer kiristhuvOdaE kooda
  உன்னதங்களிலே  அமரச்செய்தீர் – 2 -கிருபை 
  unnathangaLilaE amara seiytheer

கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக
kirubaiyin mahimaikku puhazhchchiyaaha
சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே – 2
sontha piLLaiyaai mun kuriththeeraE
  பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
  parisuththa raththaththaal meetpaLiththeeraE
  பாவம் அனைத்தையும் மன்னித்தீரே – 2 -கிருபை 
  paavam anaiththaiyum manniththeeraE

தேவனின் பலத்த சத்துவத்தாலே
dEvanin palaththa saththuvaththaalaE
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் – 2
narcheiythi arivikkum thiruththoNdanaanaEn
  கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
  kirisththu yEsuvin aLavatra selvaththai
  அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் – 2 -கிருபை 
  arivikkintraEn naan kirubaiyinaal