Ellai illaa kirubai | எல்லை இல்லா கிருபை

எல்லை இல்லா கிருபை 
நம் இயேசு தேவன் அருள்வார்  -2
  தொல்லை மிகுந்த வாழ்வில்  -2
இயேசு துணையாய் வந்து காப்பார்  -2- எல்லை இல்லா

மனிதன் கதவை அடைப்பான் 
நம் இயேசு அதனைத் திறப்பார் -2
  மனித உள்ளங்கள் மாறும் 
நம் இயேசு என்றும் மாறார்  -2- எல்லை இல்லா

பூர்வ நாளை நினைத்தேன் 
உம் புண்ணிய செயலை உணர்ந்தேன்  -2
  எண்ணில்லா நன்மைகள் அடைந்தேன் 
என் இயேசுவை என்றும் மறவேன்  -2- எல்லை இல்லா

நெஞ்சம் நொந்த போது 
நல் தஞ்சம் தந்த தேவன் -2
  நான் வாடி நின்ற போது 
என்னைத் தேடி வந்த தேவன்  -2- எல்லை இல்லா

வீசும் புயலின் நடுவில் 
கலங்கும் வாழ்க்கைப் படகில் -2
  இயேசு துணையாய் வருவார் 
என்னை பாசமுடன் அழைப்பார்  -2- எல்லை இல்லா