En idhayam sollum | என் இதயம் சொல்லும்

என் இதயம் சொல்லும்
en idhayam sollum
என் உதடும் பாடும்       (2)
en uthadum paadum
நீர் மட்டும் உண்மை அன்பு என்று
neer mattum uNmai anbu entru

உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனே
uNmaiyillaa ulahinil uyir thaviththaEnaE
உறவென்று நினைத்தோரும் உதறிப் போனார் -2
uraventru ninaiththOrum uthari pOnaar
  ஆனாலும் வாழ்வில் திரும்ப வரச் செய்தீர்
  aanaalum vaazhvil thirumba vara seiytheer
  வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர் -2 -என் இதயம்
  vakkuththaththam thanthennai thidappaduththineer

கொடுமையாய் பேசும் சிலர் குரலைக் கேட்டேன்
kodumaiyaai pEsum silar kuralaik kEttaEn
நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன் -2
nambikkai illaamal ninaivil thudiththaEn
  நினைவில் வரும் பாரம் தெரிந்தவரும்  நீரே
  ninaivil varum paaram therinthavarum neeraE
  என் சுமை சுமந்து கொண்டு உதவினீரே -2 -என் இதயம்
  en sumai sumanthu koNdu uthavineeraE

இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்று
ini vaazhkai illai ellaam mudinthathentru
வாழ்வதா சாவா என்று நினைத்த போதும் -2
vaazhvathaa saavaa entru ninaiththa pOthum
  எல்லா இடங்களிலும் எல்லா நிமிடமும்
  ellaa idangaLilum ellaa nimidamum
  என் கூடவே இருந்து தேற்றினீரே -2 -என் இதயம்
  en koodavaE irunthu thEtrineeraE