IvaraE perumaan | இவரே பெருமான்

இவரே பெருமான் , மற்றப்
ivaraE perumaan matra
பேர் அலவே பூமான் – இவரே பெருமான்
pEr alavaE poomaan -ivaraE perumaan

கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு
kavalaik kidangkoduth thariyaar -vEru
பவவினை யாதுமே தெரியார் – இப்
pava vinai yaathumaE theriyaar -ip
புவனமீது நமக்குரியார் — இவரே
puvanameethu namakkuriyaar -ivaraE

குருடர்களுக் குதவும் விழியாம் – பவக்
kurudarhaLuk kuthavum vizhiyaam -pava
கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம்
karuma iruLai neekkum oLiyaam -deivam
இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் — இவரே
irukkum thalanjchal vaasal vazhiyaam

பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும்
pala piNi theerkkum parikaari -sollum
வலமையில் மிக்க விபகாரி – எக்
valamaiyil mikka vibakaari -ek
குலத்துக்கும் நல்ல உபகாரி — இவரே
kulaththukkum nalla ubakaari

அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு
aranj seiyvathinil oru siththan -kodu
மறம்விடு பவர்க்கருள் முத்தன் – இங்கே
maram vidu pavarkkaruL muththan -ingaE
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் — இவரே
iranthOrk kuyir yeeyum karththan 

அலகை தனை ஜெயித்த வீரன் – பவ
alahai thanai jeyiththa veeran -pava
உலகை ரட்சித்த எழிற்பேரன் – விண்
ulagai ratchiththa ezhirpEran -viN
ணுலகு வாழ் தேவ குமாரன் — இவரே
Nulaha vaazh dEva kumaaran

பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள்
ponnulahath thanil vaazh yOhan -aruL
துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால்
thunna ulahil nanmai thEhan -nampaal
தன்னை யளித்த ஓர் தியாகன் — இவரே
thannai yaLiththa Or thiyaahan