Jeeva thanneerae aaviyaanavaraE | ஜீவத்தண்ணீரே ஆவியானவரே

ஜீவத்தண்ணீரே ஆவியானவரே
jeeva thaNNeeraE aaviyaanavaraE
வற்றாத நதியாக வாரும் போதகரே -2
vatraatha nathiyaaha vaarum pOthaharaE
  வாருமையா போதகரே -2
  vaarumaiyaa pOthaharaE
வற்றாத ஜீவ நதியாக -2
vatraatha jeeva nathiyaaha

கணுக்கால் அளவு போதாதையா
kaNukkaal aLavu pOthaathaiyaa
முழங்கால் அளவு போதாதையா -2
muzhangaal aLavu pOthaathaiyaa
  நீந்தி நீந்தி மூழ்கணுமே -2
  neenthi neenthi moozhhaNumaE
மிதந்து மிதந்து மகிழணுமே -நான்  -வாருமையா 
mithanthu mithanthu mahizhaNumaE -naan

போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
pOhum idamellaam aarOkkiyamaE
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே -2
paayum idamellaam parisuththamaE
  சேருமிடமெல்லாம் ஆறுதலே -2
  sErumidamellaam aaruthalaE
செல்லமிடமெல்லாம் செழிப்புதானே  -2 -வாருமையா 
sellumidamellaam sezhippuththaanaE

கோடி கோடி மீனவர் கூட்டம்
kOdi kOdi meenavar koottam
ஓடி ஓடி வலை வீசணும் -2
Odi Odi valai veesaNum
  பாடி பாடி மீன் பிடிக்கணும் -2
  paadi paadi meen pidikkaNum
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் -2 -வாருமையா 
paralOha dEvanukku aaL sErkaNum

கரையோர மரங்கள் ஏராளமாய்
karaiyOra marangaL yEraaLamaai
கனி தர வேண்டும் தாராளமாய் -2
kani thara vENdum thaaraaLamaai
  இலைகள் எல்லாம் மருந்தாகணும் -2
  ilaihaL ellaam marunthaahaNum
கனிகள் எல்லாம் உணவாகணும் -2 -வாருமையா 
kanihaL ellaam uNavaahaNum