Kanni yeentra selvamaE | கன்னி ஈன்ற செல்வமே

ஆ......ஆ.ரோ...ஆ..... ஆ.... ஆ.ரோ...
aa..aarO aa..aa..aarO
ஆ...... ஆ.ரோ...ஆ ரி ரோ ஆராரோ
aa..aarO aarirO aaraarO

கன்னி ஈன்ற செல்வமே
kanni yeentra selvamaE
இம்மண்ணில் வந்த தெய்வமே -2
immaNNil vantha deivamaE
  கண்ணே மணியே அமுதமே
  kaNNaE maNiyaE amuthmaE
  என் பொன்னே தேனே இன்பமே
  en ponnaE thEnaE inbamaE
  எண்ணம் மேவும் வண்ணமே
  eNNam mEvum vaNNamaE
  என்னைத் தேடி வந்ததேன்
  ennai thEdi vanthathaE
ஆரிரோ ஆராரோ -2
aarirO aaraarO

எங்கும் நிறைந்த இறைவன் நீ
engum niraintha iraivan nee
நங்கை உதரம் ஒடுங்கினாய் -2
nangai utharam odunginaai
  ஞாலம் காக்கும் நாதன் நீ
  gnalam kaakkum naathan nee
  சீலக் கரத்தில் அடங்கினாய்
  seela karaththil adanginaai
  தாய் உன் பிள்ளை அல்லவா
  thaai un piLLai allavaa
  சேயாய் மாறும் விந்தை ஏன் -கன்னி ஈன்ற
  sEyaai maarum vinthai yEn

வல்ல தேவ வார்த்தை நீ
valla dEva vaarththai nee
வாயில்லாத சிசுவானாய் -2
vaayillaatha sisuvaanaai
  ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ
  aatral anaiththin ootru nee
  அன்னை துணையை நாடினாய்
  annai thuNaiyai naadinaai
  இன்ப வாழ்வின் மையம் நீ
  inba vaazhvin maiyam nee
  துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன் -கன்னி ஈன்ற
  thunba vaazhvai thErnthathaEn