En samugam un mun sellum | என் சமுகம் உன் முன் செல்லும்

என் சமுகம் உன் முன் செல்லும் 
en samugam un mun sellum
ஒன்றுக்கும் கலங்காதே               (2)
ontrukkum kalangaathaE
உன்னை ஒரு போதும் கைவிடமாட்டேன் 
unnai oru pOthum kaivida maattaEn
அழைத்தது நான் தானே 
azhaiththathu naan thaanaE

ஆதி தகப்பனான 
aathi thahappanaana
அந்த ஆபிரகாமை அழைத்தது நான்  -2
antha aabirahaamai azhaiththathu naan
  கரம் பிடித்தவனை கடல் மணலளவாய் 
  karam pidiththavanai kadal maNalaLavaai
  கர்த்தர் நான் நடத்தவில்லையா -2 -என் சமுகம்
  karththar naan nadaththavillaiyaa

ஆடுகள் பின் அலைந்த 
aaduhaL pin alaintha
அந்த தாவீதை அழைத்தது நான் -2
antha thaaveethai azhaiththathu naan
  அந்த தாவீதின் வேரில் கிளையாய் துளிர்த்தவன் 
  antha thaaveethin vEril kiLaiyaai thuLirththavan
  தலையை நான் உயர்த்தவில்லையா -2 -என் சமுகம்
  thalaiyai naan uyarththavillaiyaa

ஈசாக்கின் தேவனும் நான் 
yeesaakkin dEvanum naan
அந்த யாக்கோபின் தேவனும் நான் -2
antha yaakkObin dEvanum naan
  அடிமையாய் போன யோசேப்பை தேசத்து 
  adimaiyaai pOna yOsEppai dEsaththu
  அதிபதி ஆக்கியதும் நான் -2 -என் சமுகம்
  athipathi aakkiyathum naan

யாருக்கும் அடிமை இல்லை 
yaarukkum adimai illai
நீ எவரிலும் தாழ்வதில்லை -2
nee yevarilum thaazhvathillai
  ராஜாவை தள்ளி உன்னை ராஜாவாய் ஆக்கும் 
  raajaavai thaLLi unnai raajaavaai aakkum
  ராஜாதி ராஜனும் நான் -2 -என் சமுகம்
  raajaathi raajanum naan