En yEsu raja saarOnin rOja | என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா

என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
en yEsu raja sarOnin rOja
உம் கிருபை தந்தாலே போதும் -2
um kirubai thanthaalaE pOthum
  அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
  alai mOthum vaazhvil alaiyaamal sella
  உம் கிருபை முன் செல்ல அருளும் -2
  um kirubai mun sella aruLum

கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
kadal ennum vaazhvil kalangum en padahil
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா -2
sukkaan pidiththu nadaththum en dEva
  கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
  kadalinai kaNdiththa karththar neer allavO
  கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் -2 – என் இயேசு
  kadavaatha ellaiyai en vaazhvil thaarum

பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
piLavuNda malaiyaE puhalidam neeraE
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் -2
puyal veesum vaazhvil paathukaaththaruLum
  பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
  paarinil kaariruL sEthangaL aNukaathu
  பரமனே என் முன் தீபமாய் வாரும் -2 – என் இயேசு
  paramanaE en munaE theepamaai vaarum

எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
yethir kaatru veesa yethirpOrum pEsa
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே -2
ennOdiruppavar periyavar neeraE
  இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
  yEsuvaE yaaththiraiyil karai sErkkum dEvan
  என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு
  en jeeva padahinil nangooram neeraE