En yEsu raja sthOththiram | என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் -2
en yEsu raja sthOththiram
  ஸ்தோத்திரமே  ஸ்தோத்திரமே 
  sthOththiramaE sthOththiramaE
  உயிருள்ள நாளெல்லாமே -2
  uyiruLLa naaLellaamaE

இரக்கம் உள்ளவரே
irakkam uLLavaraE
மனதுருக்கம் உடையவரே -2
manathurukkam udaiyavaraE
  நீடிய சாந்தம், பொறுமை அன்பு
  neediya saantham porumai anbu
  நிறைந்து வாழ்பவரே -2 -என் இயேசு 
  nirainthu vaazhbavaraE

துதிகன மகிமையெல்லாம்
thuthi gana mahimaiyellaam
உமக்கே செலுத்துகிறோம் -2
umakkaE seluththuhirOm
  மகிழ்வுடன் ஸ்தோத்திர பலிதனை செலுத்தி
  mahizhvudan sthOththira balithanai seluththi
  ஆராதனை செய்கிறோம் -2 -என் இயேசு 
  aaraathanai seiyhirOm

கூப்பிடும் யாவருக்கும் 
kooppidum yaavarukkum 
அருகில் இருப்பவரே -2
aruhil iruppavaraE
  உண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டு
  uNmaiyaai kooppidum kural thanai kEttu
  விடுதலை தருபவரே -2 -என் இயேசு 
  viduthalai tharubavaraE

உலகத்தோற்ற முதல்
ulaga thOtra muthal
எனக்காய் அடிக்கப்பட்டீர் -2
enakkaai adikkappatteer
  துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
  thrOhiyaai vaazhntha ennaiyum meettu
  புதுவாழ்வு தந்து விட்டீர்-2 -என் இயேசு 
  puthu vaazhvu thanthu vitteer