kuyavanaE iniya kuyavanaE | குயவனே இனிய குயவனே

  

குயவனே இனிய குயவனே

kuyavanaE iniya kuyavanaE

உமக்குரியதாக என்னை வனையும் -2

umakkuriyathaaha ennai vanaiyum

  களிமண்ணான என்மேல் செந்நீர் ஊற்றியே 

 kaLimaNNaana en mEl senneer ootriyaE

 புதிதாய் உருவாக்குமே 

 puthithaai uruvaakkumaE

 காலம் காலமாய் கர்த்தர் இயேசுவே 

 kaalam kaalamaai karththar yEsuvaE

 உமக்காய் ஒளி வீசவே 

 umakkaai oLi veesavaE

ஏற்றதாகவே என்னை வனையுமே -குயவனே

yEtrathaakavaE ennai vanaiyumaE


கருவிலே நான் உருவாகுமுன்னே 

karuvilaE naan uruvaahumunnaE 

என்னை உமக்காய் தெரிந்தவரே 

ennai umakkaai therinthavaraE

கேடுபாடுகள் நீக்கியே உந்தன் 

kEdupaaduhaL neekkiyaE unthan

பாத்திரமாக்கினீரே 

paaththiramaakkineeraE

  இனி நான் உமக்காய் பயன்படுவேன் 

  ini naan umakkaai bayanpaduvaEn

  இனிதாய் ஓசை எழுப்பிடுவேன் 

  inithaai Osai yezhuppiduvaEn

இயேசு ராஜனே எந்தன் மேய்ப்பரே -குயவனே 

yEsu raajanaE enthan mEipparaE


வாலிப நாளிலே  சிருஷ்டிகரே என்றும்

vaaliba naaLilaE sirushtikaraE entrum

உம்மை  நினைத்திடுவேன் 

ummai ninaiththiduvaEn

ஞானகாரமாம்  வசனத்தாலே  நிறைவாகி 

gnanakaaramaam vasanaththaalaE niraivaahi

மகிழ்ந்திடுவேன் 

mahizhnthiduvaEn

 எனக்காய் ஜீவன் தந்தவரே 

 enakkaai jeevan thanthavaraE

 என்னிலே வாசம் செய்பவரே 

 ennilaE vaasam seipavaraE

இயேசு ராஜனே எந்தன் நேசரே -குயவனே 

yEsu raajanaE enthan nEsaraE