பாடும் பாடல் இயேசுவுக்காக
paadum paadal yEsuvukkaaha
பாடுவேன் நான் எந்த நாளுமே
paaduvaEn naan yentha naaLumaE. (2)
என் ராஜா வண்ண ரோஜா
en raja vaNNa rOja
பள்ளத்தாக்கின் லீலி அவரே
paLLathaakkin leeli avaraE
அழகென்றால் அவர் போல
azhahentraal avar pOlaE
யார் தான் உண்டு இந்த லோகத்தில் -2
yaar thaan uNdu intha lOhaththil
வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே
vaNNa mEniyOnaE eNNi paadidavaE
என் உள்ளம் மகிழ்வாகுதே -2— பாடும்
en uLLam mahizhvaahuthaE
அன்பினிலே என் நேசர்க்கே
anbinilaE en nEsarkkaE
என்றென்றுமே இணையில்லையே -2
entrentrumaE iNai illaiyaE
என்னை மீட்டிடவே தன் ஜீவன் தந்தார்
ennai meettidavaE than Jeevan thanthaar
என் நேசர் அன்பில் மகிழ்வேன் -2— பாடும்
en naEsar Anbil mahizhvaEn
தெய்வம் என்றால் இயேசுதானே
deivam entraal yEsu thaanaE
சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே -2
saavai ventru uyirththezhunthaaraE
என் பொன் நேசரின் மார்பில் சாய்ந்தோனாக
en pon nEsarin maarpil saainthOnaaha
நான் பாடுவேன் பாமாலைகள் -2— பாடும்
naan paaduvaEn paamaalaihaL