Thuthiththu paadida paaththiramaE | துதித்துப் பாடிட பாத்திரமே

துதித்துப் பாடிட பாத்திரமே
G           G7      C           Bm 
thuthiththu paadida paaththiramaE
துங்கவன் இயேசுவின் நாமமதே
C          G       D       G
thungavan yEsuvin naamamathaE
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
G           Em         D       G
thuthihaLin maththiyil vaasam seiyum
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே
G         Em       D7             G
thooyanai neyamaai sthOththarippOmaE

ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
    G      G7       C           Am
aa arputhamaE avar nadaththuthalaE
ஆனந்தமே பரமானந்தமே
D            D7           G
aananthamaE paramaananthamaE
  நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே
  Em              D        Em     Bm   
  nantriyaal uLLamaE miha pongiduthaE
  நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் -2
        C     G          D        G
  naam allEluyah thuthi saatriduvOm

கடந்த நாட்களில் கண்மணிபோல்
kdantha naatkaLil kaNmaNi pOl
கருத்துடன் நம்மைக் காத்தாரே -2
karuththudan nammai kaaththaaraE
  கர்த்தரையே நம்பி ஜீவித்திட
  karththaraiyaE nambi jeeviththida
  கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே -ஆ .
  kirubaiyum yeenthathaal sthOththarippOmaE

அக்கினி ஊடாய் நடந்தாலும்
akkini oodaai nadanthaalum
ஆழியின் தண்ணீரைக் கடந்தாலும் -2
aazhiyin thaNNeeraik kadanthaalum
  சோதனையோ மிகப் பெருகினாலும்
  sOthanaiyO miha peruhinaalum
  ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே -ஆ .
  jeyam namakkeenthathaal sthOththarippOmaE

இந்த வனாந்தர யாத்திரையில்
intha vanaanthira yaaththiraiyil
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார் -2
inbaraam yaEsu nammOdiruppaar
  போகையிலும் நம் வருகையிலும்
  pOhaiyilum nam varuhaiyilum
  புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே --ஆ .
  puhalidam aanathaal sthOththarippOmaE

வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்
vaanjaihaL theerththida vanthiduvaar
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம் -2
vaarum entraE naam azhaiththiduvOm
  வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
  vaanaththilaE ontru sErnthidum naaL
  விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே-ஆ .
  virainthu nerungida sthOththarippOmaE