Nantri pali Nantri pali | நன்றிபலி நன்றிபலி

நன்றிபலி நன்றிபலி 
nantri pali nantri pali
நல்லவரே உமக்குத்தான்
nallavaraE umakkuth thaan
  அதிகாலை  ஆனந்தமே 
  athikaalai aananthamaE
  என்  அப்பா உம் திருப்பாதமே -2
   en appa um thiru paathamaE

நேற்றைய துயரமெல்லாம் 
nEtraiya thuyaramellaam
இன்று மறைந்ததையா -2
intru marainthathaiyaa
  நிம்மதி பிறந்தையா 
  nimmathi piranthathaiyaa
  நிரந்தரமானதையா -2
  nirantharamaanathaiyaa

கோடி கோடி நன்றி டாடி (3) -நன்றிபலி

இரவெல்லாம் காத்தீர் 
iravellaam kaaththeer
இன்னும் ஓர் நாள் தந்தீர் -2
innum Or naaL thantheer
  மறவாத என் நேசரே 
  maravaatha en nEsaraE
  (இன்று )உறவாடி மகிழ்ந்திடுவேன் -2 -கோடி கோடி
  (intru) uravaadi mahizhnthiduvaEn

ஊழியப் பாதையிலே
oozhiyap paathaiyilaE
உற்சாகம் தந்தீரையா -2
urchaaham thantheeraiyaa
  (தினம் )ஓடி ஓடி உழைப்பதற்கு 
  (thinam)Odi Odi uzhaippatharku
  உடல் சுகம் தந்தீரையா -2-கோடி கோடி
  udal suham thantheeraiyaa

வேதனை துன்பமெல்லாம்
vEthanai thunbamellaam
ஒரு நாளும் பிரிக்காதையா -2
oru naaLum pirikkaathaiyaa
  நாதனே உம் நிழலில்
  naathanaE um nizhalil
  நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு -கோடி கோடி
  naaL thOrum vaazhvEnaiyaa -yEsu