Palipeedaththil ennai paranaE | பலிபீடத்தில் என்னைப் பரனே

பலிபீடத்தில் என்னைப் பரனே
palipeedaththil ennai paranaE
படைக்கிறேனே இந்த வேளை
padaikkirEnaE intha vELai
  அடியேனை திருச்சித்தம் போல
  adiyEnai thiru siththam pOla
  ஆண்டு நடத்திடுமே -2
  aaNdu nadaththidumaE

கல்வாரியின் அன்பினையே
kalvaariyin anbinaiyaE
கண்டு விரைந்தோடி வந்தேன் -2
kaNdu virainthOdi vanthaEn
  கழுவும் உம் திரு இரத்தத்தாலே
  kazhuvum um thiru raththaththaalaE
  கரை நீங்க இருதயத்தை -2
  karai neenga irudhayaththai

நீரன்றி என்னாலே பாரில்
neerantri ennaalaE paaril
ஏதும் நான் செய்திட இயலேன் 
yEthum naan seiythida iyalaEn
  சேர்ப்பீரே வழுவாது என்னைக்
  sErppeeraE vazhuvaathu ennai
  காத்துமக்காய் நிறுத்தி  -2— கல்வாரியின்
  kaaththumakkaai niruththi

ஆவியோ டாத்மா சரீரம்
aaviyO daathmaa sareeram
அன்பரே உமக்கென்றும் தந்தேன் 
anbaraE umakkentrum thanthaEn
  ஆலய மாக்கியே இப்போ
  aalaya maakkiyaE ippO
  ஆசீர்வதித்தருளும்  -2— கல்வாரியின்
  aaseervathiththaruLum

சுயம்மென்னில் சாம்பலாய் மாற
suyamennil saambalaai maara
சுத்தாவியே அனல் மூட்டும்
suththaaviyaE anal moottum
  ஜெயம் பெற்று மாமிசம் மாய
  jeyam petru maamisam maaya
  தேவா அருள் செய்குவீர்  -2— கல்வாரியின்
  dEvaa aruL seiyhuveer

பொன்னையும் பொருளையும் விரும்பேன்
ponnaiyum poruLaiyum virumbaEn
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
maNNin vaazhvaiyum veruththaEn
  மன்னவன் இயேசுவின் சாயல்
  mannavan yesuvin saayal
  இந்நிலத்தே  கண்டதால் -2 — கல்வாரியின்
  innilaththaE kaNdathaal