தேசத்தின் நன்மையினால் திருப்தியாக்கும் தேவனே
dEsaththin nanmaiyinaal thirupthiyaakkum dEvanaE
எங்கள் மீது இரக்கம் காட்டும் அன்பு தேவனே -2
engaL meethu irakkam kaattum anbu dEvanaE
நீர் சர்வ வல்லவர்
neer sarva vallavar
என்றும் வல்லமையுடையவர் (2)
entrum vallamaiyudaiyavar
மகிமையும் நிறைந்தவர்
mahimaiyum nirainthavar
நாங்கள் உம்மைப் பணிகிறோம்
naangaL ummai paNihirOm
சென்ற காலமெல்லாம் எம்மை காத்து வந்தீரே
sentra kaalamellaam emmai kaaththu vantheeraE
தந்தையைப் போல எம்மை என்றும் சுமந்து வந்தீரே -2
thanthaiyai pOla emmai entrum sumanthu vantheeraE
நீர் அன்பு நிறைந்தவர்
neer anbu nirainthavar
மனதுருக்கம் மிகுந்தவர் (2)
manathurukkam mihunthavar
எம்மைத் தேடி வந்தவர்
emmai thEdi vanthavar
எமக்காய் ஜீவன் தந்தவர்
emakkaai jeevan thanthavar
வருஷத்தை நன்மையினால் முடிசூட்டும் தேவனே (இயேசுவே)
varushaththai nanmaiyinaal mudisoottum dEvanaE (yEsuvaE)
பாதைகளெல்லாம் நெய்யாய்ப் பொழியச் செய்யும் கர்த்தரே -2
paathaihaLellaam neyyaai pozhiya seiyyum karththaraE
நீர் உண்மையுள்ளவர்
neer uNmaiyuLLavar
என்றும் வாக்கு மாறாதவர் (2)
entrum vaakkum maaraathavar
நன்மைகள் செய்பவர்
nanmaihaL seiybavar
நாங்கள் உம்மை துதிக்கிறோம்
naangaL ummai thuthikkirOm
கண்ணீர் கவலையெல்லாம் சீக்கிரம் மாறிடுமே
kaNNeer kavalaiyellaam seekkiram maaridumaE
வாலிபர் கன்னியர் முதியோர் யாவரும் மகிழ்ந்து பாடுவோம் -2
vaalibar kanniyar muthiyOr yaavarum mahizhnthu paaduvOm
அவர் கண்ணீர் துடைப்பவர்
avar kaNNeer thudaippavar
நம் கவலை போக்குவார் (2)
nam kavalai pOkkuvaar
சஞ்சலம் நீக்குவார்
sanjalam neekkuvaar
நாம் அவரைப் போற்றுவோம்
naam avarai pOtruvOm
எங்கள் தேவனவர் கர்த்தர் சீக்கிரம் வருகிறார்
engaL dEvanavar karththar seekiram varuhiraar
ஆனந்த களிப்புடன் சீயோன் திரும்ப சென்று வாழுவோம் -2
aanantha kaLippudan seeyOn thirumba sentru vaazhuvOm
அவர் என்றும் வாழ்பவர்
avar entrum vaazhbavar
உன்னதமானவர் (2)
unnathamaanavar
ஜெய கிறிஸ்துவானவர்
jeya kirisththuvaanavar
என்றும் உயிரோடிருக்கிறார்
entrum uyirOdirukkiraar