Desaththin nanmaiyinaal | தேசத்தின் நன்மையினால்

தேசத்தின் நன்மையினால் திருப்தியாக்கும் தேவனே 
dEsaththin nanmaiyinaal thirupthiyaakkum dEvanaE
எங்கள் மீது இரக்கம் காட்டும் அன்பு தேவனே  -2
engaL meethu irakkam kaattum anbu dEvanaE
  நீர் சர்வ வல்லவர் 
  neer sarva vallavar
  என்றும் வல்லமையுடையவர்     (2)
  entrum vallamaiyudaiyavar
  மகிமையும் நிறைந்தவர் 
  mahimaiyum nirainthavar
  நாங்கள் உம்மைப் பணிகிறோம் 
  naangaL ummai paNihirOm

சென்ற காலமெல்லாம் எம்மை காத்து வந்தீரே 
sentra kaalamellaam emmai kaaththu vantheeraE
தந்தையைப் போல எம்மை என்றும் சுமந்து வந்தீரே -2
thanthaiyai pOla emmai entrum sumanthu vantheeraE
  நீர் அன்பு நிறைந்தவர் 
  neer anbu nirainthavar
  மனதுருக்கம் மிகுந்தவர்     (2)
  manathurukkam mihunthavar
  எம்மைத் தேடி வந்தவர் 
  emmai thEdi vanthavar
  எமக்காய் ஜீவன் தந்தவர் 
  emakkaai jeevan thanthavar

வருஷத்தை நன்மையினால் முடிசூட்டும் தேவனே (இயேசுவே)
varushaththai nanmaiyinaal mudisoottum dEvanaE (yEsuvaE)
பாதைகளெல்லாம் நெய்யாய்ப் பொழியச்  செய்யும் கர்த்தரே  -2
paathaihaLellaam neyyaai pozhiya seiyyum karththaraE
  நீர் உண்மையுள்ளவர் 
  neer uNmaiyuLLavar
  என்றும் வாக்கு மாறாதவர்   (2)
  entrum vaakkum maaraathavar
  நன்மைகள் செய்பவர் 
  nanmaihaL seiybavar
  நாங்கள் உம்மை துதிக்கிறோம் 
  naangaL ummai thuthikkirOm

கண்ணீர் கவலையெல்லாம் சீக்கிரம் மாறிடுமே 
kaNNeer kavalaiyellaam seekkiram maaridumaE
வாலிபர் கன்னியர் முதியோர் யாவரும் மகிழ்ந்து பாடுவோம் -2
vaalibar kanniyar muthiyOr yaavarum mahizhnthu paaduvOm
  அவர் கண்ணீர் துடைப்பவர் 
  avar kaNNeer thudaippavar
  நம் கவலை போக்குவார்      (2)
  nam kavalai pOkkuvaar
  சஞ்சலம் நீக்குவார் 
  sanjalam neekkuvaar
  நாம் அவரைப் போற்றுவோம் 
  naam avarai pOtruvOm

எங்கள் தேவனவர் கர்த்தர் சீக்கிரம் வருகிறார் 
engaL dEvanavar karththar seekiram varuhiraar
ஆனந்த களிப்புடன் சீயோன் திரும்ப சென்று வாழுவோம் -2
aanantha kaLippudan seeyOn thirumba sentru vaazhuvOm
  அவர் என்றும் வாழ்பவர் 
  avar entrum vaazhbavar
  உன்னதமானவர்                    (2)
  unnathamaanavar
  ஜெய கிறிஸ்துவானவர் 
  jeya kirisththuvaanavar
  என்றும் உயிரோடிருக்கிறார் 
  entrum uyirOdirukkiraar
  



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)