இயேசு அழைக்கிறார் -2
yEsu azhaikkiraar -2
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
aavalaai unnai tham karangaL neettiyaE
இயேசு அழைக்கிறார்
yEsu azhaikkiraar
எத்துன்ப நேரத்திலும்
yeththunba nEraththilum
ஆறுதல் உனக்களிப்பார் -2
aaruthal unakkaLippaar
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
entuNarnthu neeyum yEsuvai nOkkinaal
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் -2
yellaiyillaa inbam petriduvaai
கண்ணீரெல்லாம் துடைப்பார்
kaNNeerellaam thudaippaar
கண்மணி போல் காப்பார் -2
kaNmaNi pOl kaappaar
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
kaarmEham pOntra kashtangaL vanthaalum
கனிவோடே உன்னைக் காத்திடவே -2
kanivOdaE unnai kaaththidavaE
சோர்வடையும் நேரத்தில்
sOrvadaiyum nEraththil
ஆறுதல் உனக்களிப்பார் -2
aaruthal unakkaLippaar
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
avar un veLichcham ratchippumaanathaal
தாமதமின்றி நீ வந்திடுவாய் -2
thaamathamintri nee vanthiduvaai
சகல வியாதியையும்
sahala viyaathiyaiyum
குணமாக்கும் வல்லவராம் -2
guNamaakkum vallavaraam
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
yaaraayirunthaalum pEthangaL intriyaE
கிருபையை அன்பை அளித்திடவே -2
kirubaiyaai anbai aLiththidavaE