aaviyai mazhai pOlaE ootrum -pala
ஜாதிகளை இயேசு மந்தையிற் கூட்டும்
jaathihaLai yEsu manthaiyir koottum
பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே
paavikkaai jeevanai vitta kiristhaE
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்
parinthu neer pEsiyaE irangida seiyyum
அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
anbinaal jeevanai vitteer -aavi
அருள்மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
aruLmaari pozhiyavaE paralOhanj senteer
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
inba perukkilaE pongi mahizha
ஏராளமான ஜனங்களைச் சேரும்
yEraaLamaana janangaLai sErum
சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்
sitharuNdalaihira aattai -pinnum
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து
thEdi pidiththu neer thookki sumanthu
பதறாதே நான் தான் உன் நல்மேய்ப்பன் இயேசு
patharaathaE naan thaan un nal mEippan yEsu
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும்
paakkiyarennum nal vakkaiyaruLum
காத்திருந்த பலபேரும் – மனங்
kaaththiruntha pala pErum -manag
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
kadinang koLLaa munnaE um paatham sErum
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
thOththira keethangaL paadi puhazhnthu
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்
suththa lOgam varath thooyaavi ootrum
ஸ்தோத்திர கீதங்கள் பாடி – எங்கும்
sthOththira keethangaL paadi -engum
சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
suvisEsha jeyaththaiyaE nitham nitham trhE
பாத்திரராக அநேகரெழும்பப்
paaththiraraaha anEhar ezhumba
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்
parisuththa aaviyin aruLmaari ootrum