saththaai nishkaLamaai oru saamiya mumila thaai
சித்தா யானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
siththaa yaananthamaai thihazhhintra thiriththuvamaE
எத்தால் நாயடியேன், கடைத்தேறுவனென் பாவந்தீர்ந்து
yeththaal naayadiyaEn kadaith thEruvanen paavantheernthu
அத்தாவுன்னை யல்லா லெனக்கார் துணை யாருறவே?
aththaa unnai yallaa lenakkaar thuNai yaaruravaE
எம்மா விக்குருகி உயிரீந்து புரந்த தற்கோர்
emmaa vikkuruki uyireenthu purantha tharkOr
கைமாறுண்டு கொலோ? கடைகாறும் கையடையாய்
kaimaaruNdu kolO kadaikaarum kaiyadaiyaai
சும்மா ரஷணை செய் சொல் சுதந்தரம் யாதுமிலேன்
summaa ratshaNai sei sol suthantharam yaathumilEn
அம்மானுன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?
ammaan unnaiyallaal lenakkaar thuNai yaaruravaE
ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாச விளக்கிலங்கத்
yeendaE yennuLLaththil visuvaasa viLakkilanga
தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடுங்காண்
thooNdaa yennilanthO mayal soozhnthu koduththidung kaaN
மாண்டா யெம் பிழைக்காய் உயிர்த்தாயெமை வாழ்விக்கவே
maaNdaa yem pizhaikkaai uyirththaa yemai vaazhvikkavaE
ஆண்டா யுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே?
aaNdaa unnai yallaa lenakkaar thuNai yaaruravaE
மையார் கண்ணிருண்டு செவி வாயடைத்துக் குழறி
maiyaar kaNNiruNdu sevi vaayadaiththuk kuzhari
ஐயால் மூச்சொடுங்கி உயிராக்கை விட்டே கிடும்நாள்
iyyaal moochchodungi uyiraakkai vittaE kidum naaL
நையேல் கை வெகிவேனுனை நாணுண் பஞ்சலென
naiyEl kai vehivEnunai naaNuN panjalena
ஐயா உன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?
iyyaa unnaiyallaa enakkaar thuNai yaaruravaE
திரைசேர் வெம்பவமாங் கடல் மூழ்கிய தீயரெமைக்
thirai sEr vembavamaang kadal moozhkiya theeyaremmai
கரை சேர்த்துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான்
karai sEr thuikka ventraE puNai yaayinai kaNNiliyaan
பரசேன் பற்றுகிலேனெனைப் பற்றிய பற்றுவிடாய்
parasEn patrukilEn enai patriya patruvidaai
அரசேயுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே
arasEyunai yallaa enakkaar thuNai yaaruravaE
தாயே தந்தை தமர் குரு சம்பத்து நட்பவையும்
thaayaE thanthai thamar guru sambaththu natpavaiyum
நீயே எம்பெருமான் வேறிலை நிண்ணயங்காண்
neeyE emperumaan vErilai niNNayangaaN
எயே என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை
yEyE entruhazhum ulahOdenak kennurimai
ஆயே உன்னையல்லால் எனக்கார் துணை யாருறவே
aayE unnaiyallaal enakkaar thuNai yaaruravaE