Showing posts with label Vedanayagam Sastriar. Show all posts
Showing posts with label Vedanayagam Sastriar. Show all posts

Intha mangaLam sezhikkavaE | இந்த மங்களம் செழிக்கவே

இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
intha mangaLam sezhikkavaE -kirubai seiyyum
எங்கள் திரித்துவ தேவனே
engaL thiriththuva dEvanaE
  சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
  sunthara kanaavin maNap panthalil sentram maNaththai
  கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து
  kantha rasamaaha seiytha vinthai pOl ingEyum vanthu

ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
aathi thoduth thanbai yeduththaai manudar thammai
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
aaNum peNNumaaha padaiththaai
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
neethi varam naalung koduththaai -petrup peruhi
நிற்க உலகத்தில் விடுத்தாய்
nirka ulahaththil viduththaai
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
maathavar paNiyum vEtha pOthanaE anthappadi un
ஆதரவைக் கொண்டு சுதன் நீதியை நம்பிப்புரிந்த -இந்த மங்களம் 
aatharavaik koNdu suthan neethiyai nambip purintha

தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
thakka aabirahaamum viNdanan -athanai mana
துக்குள் எலியேசா் கொண்டனன்
thukkuL eliyEsar koNdanan
முக்ய ஆரன் நிலத்தண்டினன் – நினைத்தபடி
mukkiya aaran nilaththaNdinan -ninaiththapadi
சக்கியமதாகக் கண்டனன்
sakkiyamathaaha kaNdanan
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாவுக்கு
pakkuvam uraiththidaa rebEkkaaLum yeesaavukku
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல -இந்த மங்களம் 
thakka maNavaaLiyaaha thanthu thayai seiythaar pOla

சத்திய வேதத்தின் வாசனே – அருளும்பரி
saththiya vEthaththin vaasanaE -aruLumpari
சுத்த சுவிசேட நேசனே
suththa suvisEda nEsanaE
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
baktharhaL pava vimOsanaE -pazhuthaNuvum
அற்ற கிறிஸ்தேசு ராஜனே
atra kiristhEsu raajanaE
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
vetriyaal yaakkObuvukku mutrilum aLiththa pEraai
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய் -இந்த மங்களம் 
puththira sambaththuNdaakki niththiya suba sObanamaai


immattum jeevan thantha | இம்மட்டும் ஜீவன் தந்த

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
immattum jeevan thantha karththaavai aththiyantha
எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக
eNNamaai sthOththarippOmaaha
நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து
nammai ratchikka vanthu thammai baliyaai thanthu
  நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் -2 -இம்மட்டும் 
  narsugam mEvavum arputhamaahavum

காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும்
kaalam sol pOl kazhiyum thaNNeeraip pOl vadiyum
கனாவைப் போலேயும் ஒழியும்
kanaavaip pOlaEyum ozhiyum
வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும்
vaalibamum maraiyum seelam ellaam kuraiyum
மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது
maNNin vaazhvontrum nirka maattaathu
கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே
kOla pathumaikkum neer kumizhikkum puhaikkumaE
கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக்
koNda ulahaththil aNda paran emai
கண்டு கருணைகள் விண்டு தயவுடன் – இம்மட்டும் 
kaNdu karuNaihaL viNdu thayavudan

பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
palavitha ikkattaiyum thihilhaLaiyum kadanthOm
பரம பாதையைத் தொடர்ந்தோம் 
parama paathaiyai thodarnthOm
வலிய தீமையை வென்றோம் நலியும் ஆசையைக் கொன்றோம்
valiya theemaiyai ventrOm naliyum aasaiyai kontrOm
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்
vanjar pahaikkum thappi nintrOm
கலி என்றதெல்லாம் விண்டோம் கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்
kali entrathellaam viNdOm karththaavin meetpaik kaNdOm
காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம்
kaaintha manathOdu paainthu vizhu kaNam
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் – இம்மட்டும் 
saainthu kedavum aaraainthu neriyudan

சன சேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு
sana sEtham varuvikkum kEdukatkOr mudivu
தந்து நொறுங்கினதை கட்டிக்
thanthu norunginathai katti
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
gana sabaiyai aatharith thanbaai aaseervathiththuk
கண்ணோக்கி எல்லார் மேல் அன்றன்று
kaNNOkki ellaar mEl antrantru
தினமும் அருள் உதிக்கச் செய்து தமது தேவ
thinamum aruL uthikka seiythu thamathu dEva
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
sinthai yinOdathi vinthaiyathaai uyir
மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் – இம்மட்டும் 
mainthanaal engaLai intha vinOthamaai


KumbiduhiraEn naan kumbiduhiraEn | கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்
kumbiduhiraEn naan kumbiduhiraEn -engaL
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்
guru vEsu naathar paatham kumbiduhiraEn

அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை
ambuvi padaiththavanai kumbiduhiraEn -enai
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன் -கும்பிடுகிறேன் 
aaNdavanai meeNdavanai kumbiduhiraEn

நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவ
nambumadi yaarkkaruLai kumbiduhiraEn -pava
நாசனைக் க்ருபாசகனைக் கும்பிடுகிறேன் -கும்பிடுகிறேன் 
naasanai kirupaasahanai kumbiduhiraEn

தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய
thampamenak kaanavanai kumbiduhiraEn -niththiya
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன் -கும்பிடுகிறேன் 
saruva thayaaparanai kumbiduhiraEn

உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்
umbar thozhum vasthuvaiyaE kumbiduhiraEn -thonith
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் — கும்பிடுகிறேன் 
Osanna Osannaa ventru kumbiduhiraEn

ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்
oraE saru vEsuranai kumbiduhiraEn -ontrum
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன் -கும்பிடுகிறேன் 
oppillaatha meipporuLai kumbiduhiraEn

திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிது
thiru uruvaanavanai kumbiduhiraEn -thavithu
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன் -கும்பிடுகிறேன் 
simmaasanaathipanai kumbiduhiraEn

குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்
guruvena vanthavanai kumbiduhiraEn -yuthar
குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன் -கும்பிடுகிறேன் 
guru kula vEnthanai kumbiduhiraEn

அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் – என
arumai ratchahanai kumbiduhiraEn -ena
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன் — கும்பிடுகிறேன் 
thaaththumaavin nEsarthanai kumbiduhiraEn




NambivanthaEn mEsiyah naan | நம்பிவந்தேன் மேசியா நான்

நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே -திவ்ய
nambi vanthaEn mEsiyaa naan nambi vanthEnaE  -divya
சரணம் சரணம் சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே -நம்பிவந்தேன் 
saraNam saraNam saraNam iyyaa naan nambi vanthEnaE

தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே -வரு
thampiraan oruvanaE thambanaE tharuvanaE -varu
தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே -நம்பிவந்தேன்
thavithu kumara guru paramanuvElaE nambi vanthEnaE 

நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் -நித
ninpaatha tharisanam anbaana karisanam -nitha
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே -நம்பிவந்தேன்
nithasari thozhuva thitham enavum uruthiyil nambi vanthEnaE

நாதனே கிருபைகூர் வேதனே சிறுமைதீர் -அதி
naathanaE kirubai koor vEthanaE sirumai theer- athi
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே-நம்பிவந்தேன்
nalam mihum unathiru thiruvai aruLaE nambi vanthEnaE

பாவியில் பாவியே கோவியில் கோவியே -கன
paaviyil paaviyaE kOviyil kOviyaE -gana
பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே-நம்பிவந்தேன்
parivudan aruLpuri ahala vidaathaE nambi vanthaEnaE

ஆதி ஓலோலமே பாதுகா காலமே -உன
aathi OlOlamaE paathukaa kaalamaE -una
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே -நம்பிவந்தேன்
thadimaihaL paduthuyar avathihaL meththa nambi vanthEnaE

Paadi thuthi manamaE | பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே 
paadi thuthi manamaE 
  பரனைக் கொண்டாடித் துதி தினமே -2
  paranai koNdaadith thuthi thinamaE
நீடித்த காலமதாகப் பரன் எமை -2
neediththa kaalamathaahap paran emai
  நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து -பாடித் துதி
  nEsiththa patchaththai vaasiththu vaasiththu

தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
theerkkatharisihaLaik koNdu munnura
செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்
seppina dEva paran intha kaalaththil
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
maarkkamathaaha kumaaranai koNdu
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் -பாடித் துதி
viLakkina anbai vizhainthu thiyaaniththu

சொந்த ஜனமாக யூதர் இருந்திட
sontha janamaaha yuthar irunthida
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
tholaiyil kidantha puramaantharaam emai
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
manthaiyil sErththu paraaparan thammudai
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் -பாடித் துதி
maintharhaLaakkina santhOshaththukkaaha

எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
eththanai theerkkar anEha appOsthalar
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
eththanai pOthaharhaL iraththa saatchihaL
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
eththanai vENdumO aththanaiyum thanthingu
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை -பாடித் துதி
iththanaiyaai kirubai vaiththa nam karththanai

Seer yEsu naathanukku | சீர் இயேசு நாதனுக்கு

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
seer yEsu naathanukku jeya mangaLam athi
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
thiri yEha naathanukku suba mangaLam
  பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு -2
  paarEru neethanukku parama porpaathanukku
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு -2 -சீர் இயேசு 
nErEru pOthanukku niththiya sangeethanukku

ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
aathi saru vEsanukku yeesanukku mangaLam
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
ahila pirahaasanukku nEsanukku mangaLam
  நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு -2
  neethiparan paalanukku niththiya guNaaLanukku
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு -2-சீர் இயேசு 
Othum anu koolanukku uyar manuvElanukku

மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
maanaabi maananukku vaananukku mangaLam
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
vaLar kalai kiyaananukku gnananukku mangaLam
  கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு -2
  kaanaan nal thEyanukku kanni mari sEyanukku
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு -2-சீர் இயேசு 
kOnaar sahaayanukku kooru beththa lEyanukku

பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
paththu letcha Naththanukku suththanukku mangaLam
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
parama pathaththanukku niththanukku mangaLam
  சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு -2
  saththiya visthaaranukku saruvaathi kaaranukku
பக்தர்  உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு --2சீர் இயேசு 
pakthar ubakaaranukku parama kumaaranukku

Samaathaanam Othum yEsu kiristhu | சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து

சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து
samaathaanam Othum yEsu kirisththu
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்,இவர் தாம்
ivar thaam ivar thaam ivar thaam ivar thaam

நம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,
nama thaathi pithaavin thiru paalar ivar
அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம்
anukoolar ivar manuvElar ivar -

நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
nEya kirubaiyin oru sEyar ivar
பரம ராயர் இவர், நம தாயர் இவர் — சமாதானம்
parama raayar ivar nama thaayar ivar

ஆதி நரர் செய்த தீதறவே,
aathi narar seiytha theetharavE
அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம்
aruLaananthamaai adiyaar sonthamaai

ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
aaraNam paadi viNNOr aadavaE
அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம்
arignOr thEdavaE aayarum koodavaE

மெய்யாகவே மே சியாவுமே,
meiyaahavaE mEsiyaavumaE
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே — சமாதானம்
nammai naadinaaraE kirubai koorinaaraE

அருளானந்த மோட்ச வழி காட்டினாரே,
aruLaanantha mOtcha vazhi kaattinaaraE
நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே — சமாதானம்
nilai naattinaaraE mudi soottinaaraE

Thuthi thangiya paramaNdala | துதி தங்கிய பரமண்டல

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
thuthi thangiya paramaNdala suvisEdaha naamam
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!
suba mangaLa mihu sampirama suha sObana shEmam

அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
athi sunthara nirai koNduyar aruL mOkkisha theepan
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் — துதி
kathi umbarhaL thozhum ingitha karuNai pirathaaban

மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
manthai aayar paNinthu paatham mahizhnthu vaazhththiya aththanaar
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் — துதி
ninthaiyaai oru kanthai moodavum vantha maa pari suththanaar

திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
thiru vaan ula karasaai vaLar dEva sorupaanaar
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் — துதி
oru maathudai vinai maarida narar roopamathaanaar

ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
abiraam muni yida mEviya pathilaaL ubakaaran
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் — துதி
yebirEyarhaL kulam thaaveethen arasar kOr kumaaran

சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
saathaa raNa vEthaa kama saasththra suvisEshan
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் — துதி
kOthaE puri aathaa mudai kOthra thiru vEshan

விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
viNNaadarum maNNaadarum mEvunth thiru paathan
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் — துதி
paNNOthuvar kaNNaam vaLar para maNdala naathan

Vaarum iyya pOthaharaE | வாரும் ஐயா, போதகரே,

வாரும் ஐயா, போதகரே,
vaarum iyya pOthaharaE
வந்தெம்மிடம் தங்கியிரும்;
vanthemmidam thangiyirum
சேரும் ஐயா பந்தியினில்,
sErum iyyaa panthiyinil
சிறியவராம் எங்களிடம்.
siriyavaraam engaLidam

ஒளிமங்கி இருளாச்சே,
oLi mangi iruLaachaE
உத்தமனே, வாரும் ஐயா!
uththamanaE vaarum iyya
கழித்திரவு காத்திருப்போம்,
kazhiththiravu kaaththiruppOm
காதலனே, கருணை செய்வாய்.
kaathalanaE karuNai seiyvaai

நான் இருப்பேன், நடுவில் என்றார்,
naan iruppaEn naduvil enteer
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க,
naayan un naamam namaskarikka
தாமதமேன் தயை புரிய
thaamathamaEn thayai puriya
தற்பரனே, நலம் தருவாய்.
tharparanaE nalam tharuvaai

உன்றன் மனை திருச்சபையை
untran manai thiruchchabaiyai
உலகமெங்கும் வளர்த்திடுவாய்,
ulahengum vaLarththiduvaai
பந்தமறப் பரிகரித்தே
panthamara parihariththaE
பாக்யம் அளித் தாண்டருள்வாய்.
paakkiyam aLith thaaNdaruLvaai


YEsuvaiyaE thuthi sei | ஏசுவையே துதிசெய்

ஏசுவையே துதிசெய் நீ மனமே
YEsuvaiyaE thuthi sei nee manamaE
ஏசுவையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே
yEsuvaiyaE thuthi sei -kirisththEsuvaiyaE

மாசணுகாத பராபர வஸ்து
maasaNukaatha paraapara vasthu
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து -ஏசுவையே 
nEsakumaaran meiyaana kiristhu

அந்தரவான் தரையுந்தரு தந்தன்
antharavaan tharayuntharu thanthan
சுந்தர மிகுந்த சவுந்தராநந்தன் -ஏசுவையே 
sunthara muhuntha savuntharaananthan

எண்ணின காரியம் யாவும் முடிக்க
eNNina kaariyam yaavum mudikka
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க-ஏசுவையே 
maNNilum viNNilum vaazhnthu suhikka

Samathanam Othum Yesukiristhu | சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
samaathaanam othum aesukiristhu
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
ivar thaam ivar thaam ivar thaam

நம் தாதி பிதாவின் திருப்பாலர் இவர்
nam thaathi pithaavin thiruppaalar ivar
அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
anukoolar ivar manuvaelar ivar

நேய கிருபையின் ஒரு சேயர் இவர்
naeya kirupaiyin oru seyar ivar
பரம ராயர் இவர் நம தாயர் இவர்
parama raayar ivar nama thaayar ivar

ஆதிநரர் செய்த தீதறவே
aathinarar seytha theetharavae
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
arulaananthamaay atiyaar sonthamaay

ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
aaranam paati vinnnnor aadavae
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே
arinjor thaedavae itaiyor koodavae

மெய்யாகவே மேசையாவுமே
meyyaakavae maesaiyaavumae
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே
nammai naatinaarae kirupai koorinaarae

அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
arulaanantha motcha vali kaattinaarae
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே
nilai naattinaarae mudi soottinaarae





Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)