அன்பின் தேவன் இயேசு
anbin dEvan yEsu
உன்னை அழைக்கிறார் -2
unnai azhaikkiraar
மனிதர்கள் அன்பு மாறலாம்
manitharhaL anbu maaralaam
மறைவாக தீது பேசலாம் -2
maraivaaha theethu pEsalaam
அன்பு காணா இதயமே
anbu kaaNaa idhayamaE
அன்பின் தேவனை அண்டிக்கொள்
anbin dEvanai aNdik koL
கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
kalvaariyin mEttinil kalangum karththar uNdallO
உன்னை எண்ணி உள்ளம் நொந்து
unnai eNNi uLLam nonthu
அணைக்க இயேசு துடிக்கிறார்
aNaikka YEsu thudikkiraar
கவலையேன் கலக்கமேன் கர்த்தர் இயேசு அழைக்கிறார் -அன்பின்
kavalai yEn kalakkam yEn karththar yEsu azhaikkiraar
வியாதிகள் தொல்லையோ தோல்வியோ
viyaathihaL thollaihaL thOlviyO
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ -2
vaazhkaiyil enna yEkkamO
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
kaNNeer thaan unthan padukkaiyO
கலங்காதே மன்னன் இயேசு பார் — கல்வாரியின்
kalangaathaE mannan yEsu paar
வேலை வசதிகள் இல்லையோ
vElai vasathihaL illaiyO
வீட்டினில் வறுமை தொல்லையோ -2
veettinil varumai thollaiyO
மரண பயமும் நெருங்குதோ
maraNa bayamum nerunguthO
மரணம் வென்ற இயேசு பார் — கல்வாரியின்
maraNam ventra yEsu paar