ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
jebaththai kEtkum engaL dEva
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
jebaththin vaanjai thantharuLum
ஜெபத்திலே தரித்திருந்து
jebaththilaE thariththirunthu
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்
jebaththin mEnmai kaaNa seiyveer
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
jebamaE jeevan jebam jeyam
ஜீவியத்திற்கு இதுவே சட்டம் -2
jeeviyaththirku ithuvaE sattam
ஊக்கத்துடனே ஓர் முகமாய்
ookkaththudnaE Or muhamaai
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
vaakkuththaththaththai patri koNdu
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
nOkkaththai ellaam nErmaiyaakki
கேட்கும்படி கிருபை செய்வீர் -ஜெபமே ஜீவன்
kEtkum padi kirubai seiyveer
ஆகாத நோக்கம் சிந்தனையை
aahaatha nOkkam sinthanaiyai
அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு
ahatrum engaL nenjai vittu
வாகானதாக்கும் மனமெல்லாம்
vaahaanathaakkum manamellaam
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் -ஜெபமே ஜீவன்
vallamaiyOdaE vENdik koLLvOm
இடைவிடாமல் ஜெபம் செய்ய
idaividaamal jebam seiyya
இடையூறெல்லாம் நீக்கிவிடும்
idaiyoorellaam neekki vidum
சளைப்பில்லாமல் உந்தன் பாதம்
saLaippillaamal unthan paatham
கடைசி மட்டும் காத்திருப்போம் -ஜெபமே ஜீவன்
kadaisi mattum kaaththiruppOm