ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
jebamaE en vaazhvil seyalaaha maara
ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே -2
jeba aaviyaal ennai niraiththidumaE
ஜெபமின்றியே ஜெயமில்லையே -2
jebamintriyaE jeyamillaiyaE
ஜெப சிந்தை எனில் தாருமே -2
jeba sinthai enil thaarumaE
இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
iravellaam jebiththa en dEvanaE um
இதயத்தின் பாரம் என்னிலும் தாரும் -2
idhayaththin paaram ennilum thaarum
பொறுமையுடன் காத்திருந்தே
porumaiyudan kaaththirunthaE
போராடி ஜெபித்திடவே -2 -ஜெபமே
pOraadi jebiththidavaE
சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
sOthanaiyaNuhaa vizhippudan jebikka
சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க -2
sOthanaiyathilum sOrnthidaa jebikka
என் மாம்சத்தின் பெலவீனத்தில்
en maamsaththin belaveenaththil
ஆவியின் பெலன் தாருமே -2 -ஜெபமே
aaviyin belan thaarumaE
எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
entha samayamum ellaa manitharkkum
பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும் -2
parisuththavaanhaL paNihaL palanukku
துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
thuthi sthOththiram jebam vENduthal
உபவாசம் எனில் தாருமே -2 -ஜெபமே
upavaasam enil thaarumaE
முழங்காலில் நின்றே முழு மனதுடனே
muzhangaalil nintraE muzhu manathudanaE
விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க -2
visuvaasam uruthiyil uNmaiyaai jebikka
உம் வருகை நாளதிலே
um varuhai naaLathilaE
உம்முடன் சேர்ந்திடவே -2 -ஜெபமே
ummudan sErththidavaE