yEsu raaja vanthirukkiraar
எல்லோரும் கொண்டாடுவோம்
ellOrum koNdaaduvOm
கைதட்டி நாம் பாடுவோம்
kai thatti naam paaduvOm
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
koNdaaduvOm koNdaaduvOm
கவலைகள் மறந்து நாம் பாடுவோம் -2
kavalaihaL maranthu naam paaduvOm
கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
kooppidu nee pathil koduppaar
குறைகளெல்லாம் நிறைவாக்குவார் -2
kuraihaLellaam niraivaakkuvaar
உண்மையாக தேடுவோரின்
uNmaiyaaha thEduvOrin
உள்ளத்தில் வந்திடுவார் -2 – கொண்டாடுவோம்
uLLaththil vanthiduvaar
மனதுருக்கம் உடையவரே
manathurukkam udaiyavaraE
மன்னிப்பதில் வள்ளலவர் -2
mannippathil vaLLalavar
உன் நினைவாய் இருக்கின்றார்
un ninaivaai irukkintaar
ஓடிவா என் மகனே (ளே) -2 – கொண்டாடுவோம்
Odi vaa en mahanaE
கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
kaNNeerellaam thudaiththiduvaar
கரம் பிடித்து நடத்திடுவார் -2
karam pidiththu nadaththiduvaar
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
eNNamellaam yEkkamellaam
இன்றே நிறைவேற்றுவார் -என்-2 – கொண்டாடுவோம்
intraE niraivEtruvaar
நோய்களெல்லாம் நீக்கிடுவார்
nOihaLellaam neekkiduvaar
நொடிப்பொழுதே சுகம் தருவார் -2
nodippozhuthaE suham tharuvaar
பேய்களேல்லாம் நடுநடுங்கும்
pEihaLellaam nadunadungum
பெரியவர் திரு முன்னே – நம்ம-2 – கொண்டாடுவோம்
periyavar thiru munnaE -namma
பாவமெல்லாம் போக்கிடுவார்
paavamellaam pOkkiduvaar
பயங்களெல்லாம் நீக்கிடுவார் -2
bayangaLellaam neekkiduvaar
ஆவியினால் நிரப்பிடுவார்
aaviyinaal nirappiduvaar
அதிசயம் செய்திடுவார் -2 – கொண்டாடுவோம்
athisayam seiythiduvaar
கசையடிகள் உனக்காக
kasaiyadigaL unakkaaha
காயமெல்லாம் உனக்காக -2
kaayangaL unakkaaha
திரு இரத்தம் உனக்காக
thiru raththam unakkaaha
திருந்திடு என் மகனே -2 – கொண்டாடுவோம்
thirunthidu en mahanaE