YEsuvaE kirubaasana pathiyaE | இயேசுவே, கிருபாசனப்பதியே

இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்ட
yEsuvaE kirubaasana pathiyaE ketta
இழிஞன் எனை மீட்டருள்,
izhignan enai meettaruL
ஏசுவே, கிருபாசனப்பதியே.
yEsuvaE kirubaasana pathiyaE 

காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவு
kaasiniyil ummai antri thaasan yenak kaatharavu
கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!
kaNdilaEn saruva valla maNdalaathibaa
நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து
nEsamaai yEzhaikkirangi mOsam aNuhaathu kaaththu
நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, -இயேசுவே
niththanaE enai thiruththi vaiththaruL puththi varuththi

பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,
pEyudai siraiyathilum kaaya vinai kEdathilum
பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்
pinnamaaha sikkuNda thur kanmi aayinaEn
தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட
theeyarai meetkum poruLaai nEyam utruthiram vitta
தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, -இயேசுவே
dEvanaE enai kaN nOkki theevinai anaiththum neekki

சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி
sirappaduththina vatrai siraiyaakki vitta athi
தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே,
theeramuLLa engaL ubahaara vaLLalaE
குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும்
kurai yEthunai aNdinOr kiraivaa yenai sathikkum
குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து, -இயேசுவே
kutrangaL aravaE theerththu mutru mudiya kaN paarththu -yaEsuvaE

பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை,
pollaa ulaham athil nallaar yevarum illai
புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்
puNNiyanaE un saraNam naNNi aNdinaEn
எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி?
ellaarkkuL ellaam nee allO yenakkuthavi
இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து, -இயேசுவே
innaaL aruL purinthu un aaviyai sorinthu -yEsuvaE


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)