உள்ளம் ஆனந்த கீதத்திலே
uLLam aanantha keethaththilaE
வெள்ளமாகவே பாய்ந்திடுதே
veLLamaahavaE paainthiduthaE
எந்தன் ஆத்தும நேசரையே
enthan aaththuma nEsaraiyaE
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் -2
entrum vaazhththiyaE paadiduvaEn
உள்ளம் ஆனந்த கீதத்திலே
uLLam aanantha keethaththilaE
பாவ பாரம் நிறைந்தவனாய்
paava paaram nirainthavanaai
பல நாட்களாய் நான் அலைந்தேன்
pala naatkaLaai naan alainthaEn
அந்த பார சிலுவையிலே
antha paara siluvaiyilaE
எந்தன் பாருங்கள் சுமந்தவரே -உள்ளம்
enthan paarangaL sumanthavaraE
மலை போன்றதோர் சோதனையில்
malai pOntrathOr sOthanaiyil
மகிபன் அவர் கைவிடாரே
mahiban avar kaividaaraE
கல்வாரியின் அன்பினிலே
kalvaariyin anbinilaE
கனிவோடுன்னை அணைத்திடுவார் -உள்ளம்
kanivOdunnai aNaiththiduvaar
உலகம் முடியும் வரைக்கும்
ulaham mudiyum varaikkum
உந்தனோடிருப்பேன் என்றவர்
unthanOdiruppaEn entravar
வாக்கு மாறிடா நேசரையே
vaakku maaridaa nEsaraiyaE
என்றும் நம்புவாய் துணை அவரே -உள்ளம்
entrum nambuvaai thuNai avaraE